ஆடம்பரமில்லாமல் 90 வயது வரை ஓய்வின்றி உழைத்த சுவிசேஷ சிங்கம்

Share this page with friends

சுவிசேஷகர் வேதமாணிக்கம்

மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் தேவமனிதர் சுவிசேஷகர் வேத மாணிக்கம் ஐயா . இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குடியிருந்து தெருத்தெருவாக கிராமம் கிராமமாக சுவிசேஷம் அறிவித்தார். 100 கிராம ஊழியங்களுடன்
இணைந்து சுவிசேஷம் அறிவித்தார்.

ஒரு நாள் சத்திய மங்கலம் பஸ் ஸ்டாண்ட்டில் இவரை சந்தித்தேன். வேத வசனங்களை கழுத்தில் தொங்கவிட்டு கொண்டு சிலை போல நின்று கொண்டு இருந்தார். நான் இவர் ஒரு பைத்தியக்காரன். இவரின் கழுத்தில் யாரோ வசன போர்டுகளை போட்டுள்ளனர் என நினைத்து எனது அருகில் நின்ற பாஸ்டரிடம் இது குறித்து பேசினேன். அவர் என்னிடம் “ஐயா இவர் பைத்தியக்காரன்
அல்ல. கிறிஸ்துவுக்குள் பைத்தியக்காரன்” என்றார். எனது இருதயத்தில் 1000 வால்ட்ஸ் பல்ப் வெளிச்சம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நான் அவரிடம் நெருங்கி பேச்சு கொடுத்தேன். டீ சாப்பிட அழைத்தேன். அவர் இப்போது மைசூர் போகிற பஸ் வரும். இதில் பலர் பஸ் ஏற வருவர். அவர்கள் சுவிசேஷ வசனங்களை வாசிக்கட்டும். பஸ் புறப்பட்டவுடன் நான் டீ சாப்பிட வருகிறேன் என கூறி அன்புடன் மறுத்தார். எனது மனதில் நெகேமியா 6 : 3 வசனம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த வசனம் நான் பெரிய வேலையைச் செய்கிறேன்.. நான் வரக்கூடாது.

ஐயா அவர்கள் சுவிசேஷத்தை பொது இடங்களில் அறிவித்ததால் இடங்களில் அடிக்கப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளார்…

பொது இடங்களில் வேத வசனம் கூறக்கூடாது என பலரால் மிரட்டப்பட்டதால் ஜெபித்தார். தேவன் அவருக்கு கொடுத்த தரிசனத்தின்படி வசனங்களை அட்டையில் ஒட்டி கழுத்திலே தொங்கவிட்டு பொது இடங்களில் போய் நின்றார். இதற்கும் எதிர்ப்புகள் வந்தது. அவரோ எனது உடம்பில் வசனங்களை போட்டிருக்கிறேன். இது என் சுதந்திரம். இதை நீங்கள் கேட்க கூடாது என தைரியமாக கூறிவிட்டு பொது இடங்களில் பஸ் ஸ்டாண்ட்டில் இப்படியாக நிற்பார். நெஞ்சில் மட்டுமல்ல. பின் முதுகிலும் வசனங்களை தொங்கவிட்டு இருப்பார். அவரது வீட்டு வாசலிலும் வேத வசனங்களை காணலாம்.

சுமார் 90 வயதில் கடந்த வாரத்தில் சுவிசேஷ சிங்கம் வேதமாணிக்கம் ஐயா அவர்கள் தனது சிங்க ஓட்டத்தை ஜெயமாக முடித்து இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். கர்த்தர் ஐயாவைக் கொண்டு செய்த சுவிசேஷ பணிக்காக கர்த்தருக்கு
ஸ்தோத்திரம்.

சத்தியமங்கலம் பகுதியில் பல சுவிசேஷகர்கள் எழும்ப வேண்டும். சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது ஐயாவின் ஏக்கம். அவரது ஜெப பாரம்.. படுக்கையில் இருந்தபோது அவர்
கூறியதும் அதுவே.

“சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து சொல்கிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசா 52 : 7)

பகிர்வு செய்தி


Share this page with friends