தமிழ் கிறிஸ்தவ இசை உலகின் மாமேதை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

Share this page with friends

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இசைக்கு முழுமையாக தனது பங்களிப்பை அளித்த அகஸ்டின் மாஸ்டர் இன்று மாலை ( 30-05-2021 @ 6.30 PM Due to cardio respioratry arrest. ) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

டெலிவரன்ஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவை அமைத்து தமிழகம் மற்றும் உலகமெங்கும் எண்ணற்ற திருச்சபைகளில் கர்த்தரை மட்டுமே பாடி வந்த வாழ்வு அவருடையது. ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்த இவர் பின்னாட்களில் முழுமையாக இசைப் பணியில் ஈடுபட்டார்.

இவரிடம் இசை கற்றுக் கொண்டவர்கள் பலர் இசைத் துறையில் புகழ்பெற்று விளங்கினர். எழுபதுகளில், இவரிடமிருந்து மேற்கத்திய இசையைக் கற்றுக் கொண்ட பலர்.. பின்னாட்களில் மிகப்பிரபலமான திரைப்பட இசையமைப்பாளர்களாய் உருவாகினர்.
அகஸ்டின் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவரின் கால் படாத தமிழக திருச்சபைகள் குறைவு.

இவரது அண்ணன் காலம்சென்ற கர்த்தருடைய ஊழியர் இராஜேந்திரம் அவர்கள் அந்நாட்களில் வல்லமையான கன்வென்ஷன் பிரசங்கியாராக இருந்தார். காஸ்பல் இசையமைப்பில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த Solomon Augustine இவரது மகன் ஆவார். கர்த்தர்தாமே இ்வரது குடும்பத்தை ஆறுதல்படுத்துவாராக!

#rip #Augustinemaster #deliveranceOrchestra #augustine


Share this page with friends