வாக்கு கொடுத்தவர்கள் கொடுக்காததால் ஊழியக்காரனாக நான் அனுபவித்த கஷ்டங்கள்

Share this page with friends

போதகர்கள் திருச்சபையின் தேவைகளை சபையில் சொல்லும் போது அதாவது…
கட்டிட வேலை
கன்வென்ஷன்
பொருட்கள்
இடம் வாங்க
வாகனங்கள்
சமூக நல உதவிகள்
சாப்பாடு
மிஷனரிகள் காணிக்கை

இப்படிபட்ட தேவைகளை சொல்லும் போது உற்சாகமாக விசுவாசிகள் பொறுப்பு எடுப்பார்கள். ஆனால் பொறுப்பு எடுத்த சில விசுவாசிகள் கொடுப்பது இல்லை காரணம் சூழ்நிலையாக இருக்கலாம் நிர்விசாரமாக இருக்கலாம் போதகரின் மீது உள்ள அதிருப்தியாக கூட இருக்கலாம்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் திருச்சபையின் போதகர்கள் கடன் வாங்கியோ அல்லது கைமாற்று வாங்கியோ அந்த காரியங்களை செவ்வனே முடிக்க தள்ளப்படுகிறார்கள். இப்படி கடன் வாங்கி அதுவும் வட்டிக்கு கடன் வாங்கி கடனில் முங்கி சீரழிந்த ஊழியக்காரர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள்.

இப்படி ஒரு சோதனை எனக்கும் வந்தது அந்த சோதனைக்கு நானும் தப்பவில்லை வாக்கு கொடுத்த சிலர் கொடுக்காதபடியால் ஏக தேசம் சில லட்சங்கள் கடனில் சிக்கித் தவித்து ஒவ்வொரு நாளும் என் ஜெபமே அதற்காகவே ஆனது. ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து காணிக்கைகளையும் தசமபாகங்களையும் கடனை அடைக்க கொடுத்து விட்டு வெறுமனே நூறு ரூபாய் அல்லது ஐம்பது ரூபாயோடு வீட்டிற்கு வந்து வீட்டின் தேவைகளை சந்திக்க முடியாமல் பிள்ளைகளுக்கு கூட பீஸ் கட்ட முடியாமலும் தூர பிரயாணம் ஊழியத்திற்கு போக டிக்கெட் எடுக்க பணம் இல்லாமலும் சொல்லப்போனால் ஒரு ஹோட்டலில் சென்று ஒரு காபி கூட குடிக்க காசு இல்லாத நிலையில் மனம் வெதும்பி வெறுத்து உடைந்துப்போன நாட்கள் என்னை வெகுவாக பாதித்தது. இதனிமித்தம் மன உளைச்சல் ஏற்பட்டு சரீரத்தில் சில பலவீனங்களும் தொற்ற ஆரம்பித்தது. வாயில் சிரித்தாலும் மனதில் ஒருவித பயம் மற்றும் படபடப்புடன் வாழ்ந்த நாட்களை மறக்க முடியாது.ஆனால் வாக்கு கொடுத்தவர்கள் அதை பற்றி யோசிக்காமல் சந்தோசமாகவே வாழ்ந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அதை குறித்த கவலையோ அக்கறையோ இல்லாதது இன்னும் என்னை வேதனைக்குள்ளாக்கியது.

கர்த்தர் கிருபையால் எல்லா கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பதினெட்டு மாதங்களில் அடைக்க என் தேவன் கிருபை பாராட்டினார். அதிலிருந்து வாக்கு கொடுக்கும் விசுவாசிகளை நம்புகிறது இல்லை அதாவது அவர்களை சார்ந்திருப்பது இல்லை. அது மட்டுமல்ல வாக்கு கொடுத்தவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட வேலைகளை செய்யவும் மனதை மாற்றி கொண்டேன். பணம் வரவில்லை என்று சொன்னால் காலத்தை தள்ளி போடுங்கள் அதற்காக கடன் வாங்காதிருங்கள். கடன் ஊழியக்காரர்களாகிய நம்முடைய இமேஜை மிகவும் பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாக எடுத்து சொல்கிறேன். நன்றி வணக்கம்.

Pastor. S. D. Livingstone. Mumbai.


Share this page with friends