கழுதையினால் வந்த வாழ்வு! வித்யா’வின் பதிவு

Share this page with friends

கழுதைகள் திடீரென்று
காணாமல் போனதுகூட

சவுலுடைய வாழ்க்கையில்
எதேச்சையாய் நடந்த
ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் தேவனுடைய
பார்வையில்
அது எதேச்சையாய்
நடந்ததல்ல.
தேவ திட்டத்தின்படியே
அனுமதிக்கப்பட்ட
ஒன்றாக நடந்தது.


சவுலைக் குறித்து தேவன்
திட்டம்பண்ணிவைத்திருந்தார்.
அவருடைய திட்டத்தின்படி
எல்லாம் நடந்தது.

சவுல் வருவதற்கு
ஒருநாளைக்கு முன்னே
கர்த்தர் சாமுவேலின்
காது கேட்க சவுலைப் பற்றி
மிகவும் திட்டமாகப்
பேசியிருந்தார்.


நாளை இந்நேரத்திற்கு
பென்யமீன் நாட்டானாகிய
ஒரு மனுஷனை
உன்னிடத்தில் அனுப்புவேன்.


அவனை என் ஜனமாகிய
இஸ்ரவேலின்மேல் அதிபதியாக
அபிஷேகம்பண்ணக்கடவாய்;

அவன் என் ஜனத்தைப்
பெலிஸ்தரின் கைக்கு
நீங்கலாக்கி இரட்சிப்பான்;

என் ஜனத்தின் முறையிடுதல்
என்னிடத்தில் வந்து
எட்டினபடியினால்
நான் அவர்களைக்
கடாட்சித்தேன் என்று
வெளிப்படுத்தியிருந்தார்

( 1 சாமுவேல் 9:15,16)

சவுல்
பென்யமீன் கோத்திரத்திலே
சிறியவன்.
அவனுடைய வாழ்க்கையிலே
எதேச்சையாக நடந்த
அந்தக் கழுதைச் சம்பவம்கூட

அவனை ராஜாவாக
கொண்டுபோய்விட்டது
.

அன்றியும் அவருடைய
தீர்மானத்தின்படி
கழுதைகள் காணாமல்போனதுகூட
சவுலுக்கு
நன்மைக்கேதுவாக நடந்து முடிந்தது.


தேர்தல் ஏதுமின்றி
தேர்தல் கமிஷன் தலைவர் இன்றி

தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு
இஸ்ரவேலின் முதல் ராஜாவாக
அபிஷேகம்பண்ணப்பட்டான்.


Share this page with friends