அபிசேகம் பண்ணப்பட்டவர்களின் வாழ்வியல் போராட்டமும் அவைகளை வெற்றிகொள்ளுதலும்.

அழைப்பும் தெரிந்து கொள்ளுதலும் வாழ்வில் பெற்று இருந்தாலும் அந்த அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் சவால்கள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.
இயேசு கிறிஸ்து மகிமையின் வெளிச்சமாக இந்த உலகில் வந்து இருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும், அற்புதம் அடையாளங்கள் செய்கிறவராக இருந்தாலும், எல்லா அதிகாரம் வல்லமை பெற்று இருந்தும் அவர் வாழ்வில் பாடுகள், அவமானங்கள், பரியாசங்கள், மதியாமைகள் மற்றும் அங்கீகார மின்மைகள் போன்றவற்றை கடந்து தான் வெற்றி பெற்றார்.
பவுல் மகிமையின் பேரொளியை தரிசித்து இருந்தும் தன்னை கொண்டு கர்த்தர் பெரிய பெரிய காரியங்களை செய்து இருந்தும் தன் வாழ்வில் தான் சந்தித்த சாவல்களை தாண்டி தான் தன் ஓட்டத்தை வெற்றி கொள்ள முடிந்தது.
அபிசேகம் பண்ணபட்டவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் போராட்டம் என்று வந்தாலே தாவீதை குறித்து தான் நமது எண்ணம் சிந்திக்க ஆரம்பிக்கும். தாவீதை குறிப்பிடாத பிரசங்க செய்திகள் இல்லை என்று நாம் அற்பமாக சொன்னாலும் தாவீதின் சரித்திரத்தை படிக்க படிக்க புதிய ஆவிக்குரிய கண்ணோட்டங்கள் கிடைப்பதை பார்க்கும் போது மெய்யாகவே பைபிள் ஆவியானவரால் உந்தப்பட்டு எழுதப்பட்ட ஒரு அற்புத படைப்பு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
தாவீதை குறித்து கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவன் என்றும், அவருடைய சித்தம் ஜெய்பவன் என்றும், சிவந்த மேனி, சவுந்தரியம், காரிய சமர்த்தன், வாசிப்பதில் சிறந்தவன், பராக்கிரம சாலி, கர்த்தர் அவனோடு இருந்தார் என்று கர்த்தரால் சாட்சி பெற்று இருந்தாலும் அவன் வாழ்வில் போராட்டங்களை face பண்ண தான் செய்தார்.
நாம் தொடர்ந்து அபிசேகம் பண்ணப்பட்ட தாவீதின் வாழ்வியல் போராட்டமும் மற்றும் வெற்றி வாழ்வையும் குறித்து தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக! நான்கு இடத்தில் இருந்து வந்த போராட்டங்கள் என்று வகைப்படுத்தலாம்.
A. குடும்பத்தில் இருந்து வந்த அல்லது ரத்தபந்தங்களில் இருந்து வந்த சவால்கள்.
தாவீது தகப்பனுக்கு கீழ்படிந்து ஆடுகளை மேய்க்கிறவனாக இருந்தும், எந்த சூழலில் அந்த குடும்ப வேலை கொடுக்கப் பட்டது என்பது வேதத்தில் சொல்ல படாவிட்டாலும் அது நிச்சயமாக ஒரு நல்ல pleasing experience என்று சொல்ல முடியாது. ஏனெனில் தாவீது 51 ஆம் சங்கீதம் பாடும் போது என் தாய் என்னை பாவத்தில் கற்பம் தரித்தாள் என்று சொல்கிற பதத்தை பார்க்கும் போது பிறப்பில் ஏதாவது மர்மம் இருந்து இருக்கலாம். தாவீது இன்னொரு இடத்தில் பாடும் போது சிறுவயது முதல் நீரே என் நம்பிக்கை என்று கர்த்தரை சிறுவயது முதல் சார்ந்து இருந்ததை பார்க்க போது தாவீதின் குழந்தை பருவ அனுபவங்கள் கர்த்தரை சார்ந்து இருக்க செய்து இருக்கிறது.
தனது சகோதரன் எலியாப் கூட தாவீதை பொல்லாத எண்ணம் உடையவன் என்றும் அகங்காரி என்றும் துணிகரமானவன் என்றும் ஆடுகளை யார் வசம் விட்டாய் என்று கேட்டு திட்டுவதை கோலியாத்தின் விடயத்தில் நாம் பார்க்கிறோம். இவைகளை கவனிக்கும் போது தாவீதுக்கும் தன் வீட்டிற்கும் ஏதோ நெருடல்கள் இருந்து கொண்டே வந்ததை நாம் இங்கு கவனிக்கிறோம். ஆனாலும் தாவீது இவைகளை வெற்றி கொள்கிறான். எப்படி?
- எந்த சூழலிலும் தகப்பனுக்கு கீழ்படிகிறான். இயேசு கிறிஸ்துவும் தாய் தகப்பனுக்கு ஏற்ற காலம் வரை கீழ்படிந்து இருந்தார்.
- எலியாப்பிடம் தான் தவறு செய்யாதிருந்தும், அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. (ஏற்கனவே அவன் அரண்மனையில் ராஜாவுக்கு சுரமண்டலம் வாசித்து, தகப்பன் ஆடுகளை மேய்த்து, தகப்பன் சொல் கேட்டு யுத்தத்தில் இருக்கும் சொந்த சகோதரர்களை விசாரிக்க வந்து இருக்கிறான்) மாறாக வேறொருவனிடம் திரும்பி கோலியாத் நிலவரத்தை கேட்டு கொள்கிறான். அந்த வேறொருவன் அவனை சவுல் ராஜாவிடம் கொண்டு செல்கிறான்.
- தன்னை கனப்படுத்தும், தனக்கு உதவியாக இருக்கும் தன் தாயின் உறவுகளோடு அதிக நெருக்கம் பாராட்டி அவர்களை தனது ராணுவத்தில் சேர்த்து அவர்கள் மிஞ்சி போகும் போதும் கடிந்து கொண்டு அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான்
- குடும்ப உறவில் தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியம் என்று தாவீதின் வாழ்வு கற்று தருகிறது. அதில் அவன் தோற்று போய் விட்டதின் விளைவு தன் பிள்ளைகளான அம்மோன், அப்சலோம் விடயத்தில் அவமானம் அடைகிறான். பின்னர் அவனது மனம் திரும்புதல் மூலம் கர்த்தர் சாலமனுக்கு இரக்கம் பாராட்டினார்.
B. கோலியாத் என்னும் அந்நிய சக்தி. இன்றைய காலகட்டத்தில் இது வானமண்டல அந்தகார சக்தியை குறிக்கிறது.
எல்லாரும் ராஜாவின் வீரர்களும், ஏன்? தாவீதின் சொந்த சகோதரர்கள் கூட பயந்து போகும் போது தாவீது இந்த கோலியாத்தை வெற்றி கொள்கிறான்.
கோலியாத் தாவீதை அற்பமாக எண்ணி, அசட்டை பண்ணி, ஏளனம் செய்கின்றான். அதுவும் போதாது என்று தன் தேவர்களை கொண்டு சபிக்கிறான். அந்தகார சக்திகளோடு நமக்கு போராட்டம் உண்டு. நமக்கு விரோதமாக சொல்லப்பட்ட magical spells must be broken. தாவீது அதையும் தாண்டி வெற்றி பெற்றான். எப்படி?
- வெற்றியின் opportunity யை தேடி கண்டு பிடிக்கிறான். நன்றாக விசாரிக்கின்றான், இந்த கோலியாத்தை கொன்றால் என்ன கிடைக்கும்? வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தை புரிகின்றார்
- யாரும் காணாத வேளைகளில் கர்த்தர் தந்த வெற்றியை நினைவு கூறுகின்றான்.( சிங்கம் மற்றும் கரடி) அந்தரங்க வாழ்வின் வெற்றி அந்தகார வல்லமையை வெற்றி கொள்ள உதவும் ஒரு பெரிய ஆயுதம்.
- பிறரது வஸ்திரத்தை உதறி தள்ளுகிறார். வெற்று ஷோ காட்ட விரும்பவில்லை. தான் தானாக இருக்கிறான்.
4.தான் அங்கு வந்ததற்கு முகாந்திரம் உண்டு என்று வாழ்க்கை நோக்கத்தை உறுதிபடுத்தும் வார்த்தை பேசி தன் அழைப்பில் நிற்கின்றான். - தன் திறமை, வரத்தை பயன்படுத்துகிறான். அழைப்புக்கு ஏற்ற அபிசேகம், வரம் கிருபை போன்றவற்றை கர்த்தர் தருகிறார். அதை பயன்படுத்த வேண்டும்.
- சவாலை சந்திக்கிறான். பின்னிட்டு திரும்பவில்லை.
- எல்லாவற்றுக்கும் மேலாக கோலியாத் நிந்தித்த இஸ்ரவேலின் சேனைகளின் கர்த்தர் நாமத்தை சார்ந்து நிற்கின்றான். அவரால் ஒரு சேனைக்குள் பாய்கின்றான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வைக்கும் விசுவாசம் தான் உலகத்தை பிசாசை வெற்றி கொள்ள உதவி செய்யும்.
கோலியாத் விசயத்தில் வெற்றி கொண்ட தாவீது பின்னாட்களில் இதே முறையை கையாண்டு வெற்றி பெற வேண்டிய இரண்டு விடயத்தில் கோட்டை விட்டான். ஒன்று பத்ஷீபா விடயத்திலும், சாத்தானால் தூண்டப்பட்ட விடயத்திலும் தோற்று போனான். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் ஒவ்வொரு நாளும் அந்தகாற சக்திகளை வெற்றி கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஒன்றில் வெற்றி கொண்டு மற்றொன்றில் தோற்று போக பண்ணும் படி சத்ரு எப்போதும் போராடி கொண்டே இருப்பான் .
C. உலகத்தில் உள்ள மனிதர்களோடு உள்ள போராட்டம். சம்மந்தம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் போராட்டம்.
சீமேயு தாவீதுக்கு சம்மந்தம் இல்லாதவன். சவுல் குடும்பத்தில் உள்ள ஒருவன். தாவீதுக்கும் தன் மகன் அப்சலோமுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களுக்கு இடையில் தேவையில்லாமல் நுழையும் ஒரு அதிக பிரசங்கி, தாவீதின் சூழ்நிலையை தவறாக அனுமானித்து, தாவீதை தூசித்தவன். தாவீதை இரத்த பிரியன் என்றும், பேலியாளின் மகன் என்றும், தொலைந்து போ தொலைந்து போ என்று கற்களை எறிந்தும் மண் வாரி எறிந்தும் தூசிக்கின்றான். பிறரது சூழ்நிலையை பயன்படுத்தி தான் நீதிமானாக மாறி தாவீதை மட்டம் தட்டுகின்றான். தேவையில்லாமல் சகதியை அள்ளி வீசும் மடையன். தங்கள் வேலையை பார்க்காத முட்டாள்கள், பிறரை எப்போதும் தூற்றி கொண்டே இருக்கும் அதி மேதாவிகள் தான் இப்படிப்பட்டவர்கள். இதையும் வெற்றி கொண்டு தான் ஆக வேண்டும்.
இதை தாவீது எப்படி வெற்றி கொள்கிறான்?
- தேவன் அனுமதித்தார் என்று ஏற்று கொள்கிறான்.
- ஒருபோதும் இதற்கு எதிரிடையான நிலையில் எந்த react பிரிதிபலிப்பு செய்ய வில்லை.
- தனது அனுதாபிகள் இதில் தேவையில்லாமல் தலையிட அனுமதிக்க வில்லை. அவர்களை கட்டுப்படுத்தினான்.
- எதிர் கொண்டு வந்த அதே சீமேயுவை மன்னித்து தண்டனையை தள்ளி விட்டான். ஆனாலும் தன் மகனிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு விவேகமாக நடந்தான்.
D. கடைசியாக அபிசேகம் பண்ணபட்டவர்களிடம் இருந்து வரும் போராட்டம். ஒருமித்த வேலையில் உள்ளவர்களிடம் இருந்து வரும் சவால்கள்.
எல்லாருக்கும் தெரிந்த படியே நம்மில் கூட பலரும் யாராவது உடன் இருக்கும் நபர்களிடம் இருந்து ஏதாவது போராட்டம் வந்தால் உடனே அது சவுலின் ஆவி என்று சொல்லி வருந்தி கொள்கிறோம். தாவீதை உருவாக்க வேண்டிய சவுல், தாவீதை பக்குவப்படுத்தி வளர்த்த வேண்டிய சவுலே தாவீதுக்கு விரோதமாக வரும் போது தாவீது எப்படி வெற்றி கொள்ள முடியும். இது ஒரு நீண்ட போராட்டம். நெடு நாள் யுத்தம். தாவீது வர வர பலத்தான். ஆனால் சவுல் வர வர பெலவீனபட்டான்.
சவுல் எப்படி தாவீதை பின் தொடர்ந்தான் என்றும் தாவீது எப்படி வெற்றி கொண்டான் என்றும் கவனிப்போம்.
- சவுல் தாவீதை காய்முகாரமாக பார்த்தான். பொறாமை எரிச்சல் தான் இதற்கு காரணம். அபிசேகம் பண்ணபட்டவர்களுக்கு இடையிலும் பொறாமை வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தாவீது முதன் முதலில் சவுலின் சிந்தையில் கொல்ல பட்டான். சிந்தையில் வரும் வீனானவைகளை முதலில் கிள்ளி எறிய வேண்டும். பிறரது வாழ்வின் உயர்வில் சந்தோசப் பட கற்று கொள்ள வேண்டும். பிறரது மேன்மையை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இயேசு கிறிஸ்து தான் போவது உங்களுக்கு நல்லது என்று சீடர்களை பார்த்து சொல்கிறார். தாவீது இதை நன்றாக அறிந்ததின் பலன், தனது மகன் சாலோமணை தனது முதுர்வயதில் தான் அமர்ந்து இருந்த அதே சிங்காசனத்தில் உட்காரவைத்து அழகு பார்த்து, தன் சொந்த கோவேறு களுதையில் ஏற்றி நகர்வலம் கொண்டு வந்து தன் சொந்த மகனை ஒரு ராஜாவின் ஸ்தானத்தில் ஏற்படுத்தி குனிந்து வணங்கினான் என்று வசனம் சொல்கிறது. பிறரை அரியணை ஏற்றி மகிழ்வது ஒரு சந்தோசம் தான். அதற்காக தாவீது கர்த்தரை துதித்தான் என்று வசனம் சொல்கிறது.
- சவுல் தன் ஈட்டியை இரண்டு முறை பயன்படுத்தி சுவரோடு சேர்த்து தாவீதை குத்தி கொல்ல பார்க்கிறான். அதில் தாவீது இரண்டு முறையும் தாவீது தப்பி விடுகிறான். பொறாமை மற்றும் எருச்சலை கட்டுபடுத்த வில்லையெனில் வார்த்தைகள் அரி பிளவை போன்றும் பட்டயம் போன்றும் எறியப்படும். வார்த்தைகளால் வரும் காயங்களுக்கு தப்பிவிட்டால் அதுவே மிக பெரிய பாக்கியம். தேவை இல்லாத வார்த்தைகளை ignore பண்ணி விட வேண்டும். எல்லா வார்த்தைகளுக்கும் சேவிகொடுக்க கூடாது.
- தனது குடும்பத்தினர் மூலம் தாவீதை கொல்ல பார்க்கின்றான். ஆனால் தாவீதின் நண்பனாக சவுலின் குமாரன் மாறி விட்டான். தாவீதை யோனத்தான் உயிருக்கு உயிராக நேசித்தான். உடபடிக்கை செய்தும் நேசித்தான். ஒரு உறவில் ஒருவர் செய்த தவறுக்காக தாவீது அந்த உறவில் உள்ள மற்ற எல்லாரையும் பகைக்க வில்லை. ஆனால் பிற்காலத்தில் யாரெல்லாம் சவுலின் குடும்பத்தில் இருந்து தாவீதுக்கு விரோதமாக எழும்பினார்களோ அவர்களை கொன்றும் போட்டான். தாவீது தன்னை பகைத்த சவுலை சார்ந்தவர்களை தேவையில்லாமல் ஒருபோதும் பகைக்க வில்லை.
- எதிராளிகள் கையினால் தாவீது விழுந்து அழிந்து போகும் வண்ணம் தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது போல தந்திரமாக பேசி பெலிஸ்தியர் கையினால் கொல்ல பார்த்தான். ஆனால் தாவீதோ பெலிஸ்தியரை முறியடித்து போட்டான். கிட்டத்தட்ட இந்த கண்ணி தோற்று போக தன் மகள் மீகாலை தாவீதுக்கு திருமணம் செய்து வைக்கிறான். ஏற்கனவே ஒருமகளை கொடுக்கலாம் என்று சொல்லி வேறு ஒருவனுக்கு கொடுத்து விட்டான்.
- இஸ்ரவேல் ஜனத்ததை திரட்டி தாவீதை கொல்ல பார்க்கிறான். முடிவில் ஜனம் தாவீதை நேசித்தார்கள் என்றும் வசனம் சொல்கிறது. ஒருபோதும் நமது உடன் ஊழியரை கெடுக்க நாம் அவர்களது ஜனத்தையோ நமது ஜனத்தையோ தூண்டி விட்டு உள்ளடி வேலை செய்ய கூடாது. அது சவுலுக்கு தோல்வியில் தான் முடிந்தது. ஜெருசலேம் குமாரத்திகளை மயக்க அவர்கள் வஸ்திரங்களில் தாங்க சரிகை போட்டு கோடுத்த சவுல். இது இன்றும் நடக்கிறது. ஆனால் முடிவில் ஜனம் தாவீதுவுடன் சேர்ந்து கொண்டார்கள் என்று வசனம் சொல்கிறது.
- தனது ஊழியர்கள் சேவகர்கள் கொண்டு தாவீதை பின்தொடர்ந்து போய் கொலை செய்ய தேடுகிறான். தாவீது மலைகள், கெபிகளில் தப்பி தப்பி செல்கிறான். ஆனாலும் சவுலை தாவீது இரண்டு முறை தப்ப விடுகிறான். இது தாவீதின் மனிதாபிமானத்தையும் தான் அபிசேகம் பண்ணபட்டவர் மேல் கைபோட கூடாது என்று தான் எடுத்த தன்மான தீர்மானத்தையும் காட்டுகிறது. இரண்டு முறையும் சவுல் நல்லவன் போல நடித்து தாவீதை உத்தமன் என்றும், தாவீதே நீ பெரிய காரியங்கள் செய்வாய் என்றும் புகழ்ந்து மறுபடியும் தன் துரத்தல் வேட்டையை தொடங்கினான். எதிராளியின் புகள்ச்சியில் வஞ்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே நாம் பெரும்பாலும் தப்பி விடுவோம். தாவீது ஆனாலும் சவுலை நம்பவில்லை.
- கடைசியாக சவுல் தெரிந்து கொண்ட 3000 பேரை கொண்டு தாவீதை பின்தொடர்ந்து போகிறான். சவுல் தெரிந்து கொண்ட இந்த 3000 பேர் மேல் கர்த்தர் தீர்க்கதரிசன ஆவியை திரும்ப திரும்ப கொடுத்து தீர்க்கதரிசனம் உரைத்து வழிகளை திருப்பி விட்டார் தாவீது தப்பி காத் பட்டணத்து ராஜாவாகிய ஆகீசிடம் தஞ்சம் புக பெலிஸ்தியரிடம் தாவீது போய் விட்டான் என்பதை அறிந்து அவர்கள் கையில் செத்து போகட்டும் என்று சொல்லி பின்னர் தாவீதை சவுல் பின்தொடர வில்லை. ஆனால் நிலமை மாறி அதே பெலிஸ்தியர் சவுலுக்கு எதிராக யுத்தத்திற்கு வந்து, யுத்தம் பலத்து போக சவுலின் குமாரனாகிய யோனத்தானும் தானும் யுத்தத்தில் மரித்து போனார்கள். சவுல் தன்னை தானே தனது ஆயுததாரியின் துணை கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
ஆனால் தாவீது எப்படி நடந்து கொண்டான்?
A. மகாபுத்திமானாக நடந்து கொண்டான்.
B. எக்காரணம் கொண்டும் அபிசேகம் பண்ணப்பட்டவர் மேல் கைபோட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். தன்னை தூண்டி விட்டவர்களையும் தடுத்து விட்டான்.
C. கர்த்தரிடம் விசாரித்தான். ஏபோத் அணிந்த ஆசாரியர்கள் எப்போதும் தன்னோடு இருக்க பார்த்து கொண்டான்.
D. சாமுவேல் மற்றும் காத் போன்ற தீர்க்கதரிசிகளை தாவீது தேடி போய் அவர்களிடம் தன் காரியங்களை update செய்து ஆலோசனை கேட்டான்.
E. எப்போதும் சவுலிடம் மோதல் போக்கை கையாளமல் விலகி போனான். சவுலை ஒரு எதிராளி போல பார்க்காமல் அபிசேகம் பண்ணபட்டவர் என்றே கருதி நடந்து வந்தான்.
F. சவுல் தன்னை துரத்தி கொண்டே இருந்தாலும் சவுல் செய்ய வேண்டிய யுத்தங்களை செய்து இஸ்ரேல் ஜனத்தையும் தன்னையும் காப்பாற்றி கொண்டான். பராக்கிரசாலிகள் தன் பக்கமாக தானே சேர்ந்து கொண்டார்கள்.
G. சவுலின் மரணத்தை கொண்டாடாமல் அழுது புலம்பினான். யோனத்தானின் குடும்பத்திற்கு பரிவு காட்டினான்.
ஆனால் சவுலோ!
A. தாவீதோடு கர்த்தர் இருப்பதை அறிந்து கொண்டு பயந்தான்.
B. தன் நோக்கத்தை விட்டு தாவீதை துரத்துவதில் கொல்வதில் கவனம் செலுத்தினான்.
C. ஆசாரியர்களை கொன்று போட்டான்.
D. தான் கொன்று போட்ட குறிகாரர்களை தேடி சென்றான்.
E. வர வர பலவீனமடைந்து கொண்டான். மிரட்டி பராக்கிரமசாலிகளை சேர்த்து கொண்டான்.
F. கலங்கிய நிலையில் என்ன செய்ய வேண்டும் என்கிற நிலை அறியாமல் தடுமாறினான்.
G.யுத்தங்களில் தோல்வி மேல் தோல்வி அடைந்து முடிவில் தற்கொலை அடைந்தான். தன் குடும்பத்தில் ஒருவரையும் தொடர் நிலையில் ஏற்படுத்த முடியாமல் மாண்டு போனான்.
கர்த்தர் நமது போராட்டங்களில் வெற்றி பெற கிருபை தருவாராக!
செலின்