பலன் அளிக்க கர்த்தர் வருகிறார்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்: அவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.
வெளி : 22 : 12.
சங் : 62 : 12
எரே : 31 : 16
இதே சீக்கிரமாய் வருகிறேன் என்று வார்த்தையை வைத்து வருகையை இந்தக் குறிப்பில் முக்கியப்படுத்தபோவதில்லைஆனால் இயேசுவரும் போது அவரவர் கிரியைகளுக்கு தக்கதாக பலன் அளிப்பார். ஆகவே பலனைப் பெற்றுக்கொள்ளும்படி கிரியை செய்யுங்கள். எந்தெந்த காரியங்களுக்கு பலன் அளிக்க வருகிறார் என்பதை சிந்திக்கலாம். பலன் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி குறிப்பை சிந்திக்கலாம்.
- நமது கிரியைகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் நாம் தானதர்மம் செய்ய வேண்டும்.
மத் : 6 : 1 — 4
எபி : 13 : 16
அப் : 10 : 4 - நமது கிரியைகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் நாம் ஜெபம்பண்ண வேண்டும்.
மத் : 6 : 5 , 6
1 தீமோ : 2 : 1 , 2
ஏசாயா : 53 : 12
எசே : 9 : 4 - நமது கிரியைகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் உபவாசிக்க வேண்டும்.
மத் : 6 : 17 , 18
ஏசா : 58 : 3 — 7
மத் : 17 : 21
யோவே : 2 : 12
எஸ்றா : 8 : 21 - நமது கிரியைகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் கர்த்தரிடம் அடைக்கலம் புக வேண்டும்.
ரூத் : 2 : 12
சங் : 2 : 12 , 73 : 23,24 - நமது கிரியைகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் நாம் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
கொலோ : 3 : 23 — 25
ரோம: 12 : 11, 7 , 8
ஏசா : 65 : 13 , 14
யோவா : 12 : 26
இயேசு வரும்போது அவனவன் கிரியைகளுக்கு தக்கதாய் பலன் அளிப்பார் என்றும் அந்த பலனை பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் அதாவது தான தர்மம் செய்யவேண்டும் , ஜெபம்பண்ண வேண்டும் என்றும் உபவாசிக்க வேண்டும் என்றும், கர்த்தரிடம் அடைக்கலம் புக வேண்டும் என்றும் மற்றும் அவருக்காக ஊழியம் செய்தால் நாம் அவர் அளிக்கும் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur