கர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்

Share this page with friends

நான் சிறுமையும்எளிமையுமானவன்: கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார்: தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்
சங் : 40 : 17

கர்த்தரே என் மேல் நினைவாயிருக்கிறார் என்பதே இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தம். தாவீது இந்த வாக்கை தனக்கென்று சொந்தமாக எடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையில் இவை நிறை வேறும் என்று கர்த்தர் மேல் நினைவாயிருந்தான். நாமும் அப்படியே
இந்த வாக்குத்தத்தம் என் வாழ்க்கையில் நிறைவேறுமென்று கர்த்தர் மேல் நினைவாய் இருப்பீர்களாக. எனென்றால் தாவீதின் தேவன் நம்முடைய தேவன். பிரியமானவர்களே, அநாதி தேவனும் அல்பாவும் ஒமெகாவுமாக இருக்கிறவரும் விடிவெள்ளி நட்சத்திர மானவரும், இம்மானுவேலரும், இராஜிதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தரும், சாரோனின் ரோஜாவும், சர்வ வல்லவராமாயிருக்கிற கர்த்தர் வரும் ஆண்டு முற்றும், உங்களது எல்லா சூழ்நிலைகளி லும் உங்களை மறவாது உங்களை நினைத்துக் கொண்டேயிருப்பார். இந்தக் குறிப்பில் தேவன் நினைத்தருளிய நான்கு பேரைக் குறித்து
நாம் சிந்திக்கலாம். அவர்கள் யார் என்றும் அவர்களது சூழ்நிலைகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

புது வருட செய்தி
” கர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார் .

1. உத்தமமாய் நடந்த நோவாவை தேவன் நினைத்தருளினார்.

தேவன் நோவாவையும்அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்…. ஆதி : 8 : 1 நோவா நீதிமானும் உத்மனுமாய் வாழ்ந்தவன். ஆதி : 6 : 9 , 8. நோவா எப்போதும் தேவனோடு சஞ்சரித்துவன். தேவனுக்கு
கீழ்படிந்து நீண்ட நாட்களாய் பேழைக்குள் திருந்த நோவாவைmகர்த்தர் நினைத்தருளினார். நோவாவை நினைத்திருளின தேவன் வரும் வருடத்திலும் உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் நினைத்தருளுவார். ஏனென்றால் நோவாவின் தேவன் நம்முடைய தேவன். நீங்களும் நோவாவைப்போல உத்தமனாயிருங்கள்.

2. பரிந்துரை ஜெபத்தினால் தனது விருப்பத்தைத் தெரிவித்த ஆபிரகாமை தேவன் நினைத்தருளினார்.

தேவன் அந்த சமபூமி யின் பட்டணத்தை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்துகுடியிருந்த பட்டணங்களைத்தாம் கவிழ்த்து போடுகையில் லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார் ஆதி : 19 : 29

பரிந்துரை ஜெபத்தை கேட்கிற தேவன் வரும் வருடத்தில் நமது விருப்பங்கள்மீதும் நினைவாயிருந்து அவற்றை நிறைவேற்று வார். ஆபிரகாம் சோதேம் பட்டணத்தின் அழிக்கக் கூடாது என்று அந்தப் பட்டிணத்திற் காகவும், நீதிமான் காப்பாற்றப்படவும் பரிந்துரை ஜெபத்தை ஏறெடுத்தான். ஆதி : 18 : 17 — 33. வரும் வருடத்திலும் கர்த்தர் உங்களது விருப்பத்தையும் நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்களோ எல்லா பரிந்துரை ஜெபத்தையும் தேவன் கேட்பார். உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றுவார். ஏனென்றால் ஆபிரகா மின் தேவன் நம்முடைய தேவன். வரும் வருடம் உங்களையும் உங்கள் விருப்பங்களையும், உங்கள் ஜெபங்களையும் கர்த்தர் நினைத் தருளுவார்.

3. நிந்தையை அநுபவித்த ராகேலை தேவன் நினைத்தருளினார்.

தேவன் ராகேலை நினைத்தருளினார்: அவளுக்குத் தேவன்செவிக்கொடுத்து, அவள் கர்பந்தரிக்கும்
படி செய்தார். … தேவன் என் நிந்தையை நீக்கி விட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்கு தருவார்
என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
ஆதி : 30 : 22 , 23 , 24.

பிள்ளை பெறாத மலடியாயிருந்த ராகேல்
தன் கணவனை நோக்கி எனக்கு பிள்ளைக் கொடும், இல்லாவிட்டால்
நான் சாகிறேன் என்றாள். இத்தகைய நிந்தையின் நிலைமைக்கு ராகேள் தள்ளப்பட்டு, மனமடிவுற்று சோர்வடைந்தாள். இந்த நிந்தையின் சூழ்நிலையைதேவன் நினைத்தருளி
எகிப்துக்கு அதிபதியாக யோசேப்பு என்ற பிள்ளையை பெற்றெடுக்க தேவன் ராகேலை நினைத்தருளினார். வரும் வருடத்திலும் உங்கள் மேல் நினைவாயிருந்து உங்கள் நிந்தையை மாற்றி ஆசீர்வதிக்
கப் போகிறார். ராகேலின் தேவன் நம்முடைய தேவன். தேவன் இந்த
நிந்தையின் சூழ்நிலையை நினைத்தருளும் வரை கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்க வேண்டும். வரும் புதிய வருடத்தில் கட்டாயம் கர்த்தர் உங்கள் யாவரையும் நினைத் தருளுவார்.

4. அன்னாளின் பொருத்தனையும் விண்ணப்பத்தையும் கர்த்தர் நினைத்தருளினார்.

அவர்கள் அதிகாலையில் எழுந்து கர்த்தரை பணிந்துக்கொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பி போனார்கள்.
எல்கானா தன் மனைவியாகிய அன்னாளைஅறிந்தான். கர்த்தர்அவளை நினைத்தருளினார். 1 சாமு : 1 : 19

கர்த்தர் அன்னாரின் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 1 சாமு : 1 : 5.
அன்னாள் மலடியாய் இருந்தாள். அவளது உறவினர்களும் மற்றவர்களும் அவளை மலடி மல்டி என்று அவளை விசனப்படித்
தினார்கள். அன்னாள் தேவனுடைய ஆலயத்திற்கு வந்து விண்ணப்பத்தையும் பொருத்ததையும் செய்தாள் 1 சாமு : 1 : 10 , 11. அன்னாரின் விண்ணப் பந்தைக் கேட்ட கர்த்தர் ஏலி என்ற ஊழியக்காரன் மூலமாக 1 சாமு : 1:17 தேவன் உறுதிப்படுத்தினார். பிறகு அன்னாள் துக்கமாக இருக்கவில்லை. அன்னாலின் விண்ணப்பத்தைக் கேட்டு தேவன் சாமுவேலைக் கொடுத்ததார். 1 சாமு : 1 : 27. இந்த புதிய வருடத்திலும் நீங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு வந்து பொருத்தனையோடு தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணுங்கள் தேவன் உங்கள் விண்ணப்பங்களை
கேட்டு உங்களையும் உங்கள் விண்ணப்பங்களையும் நினைத்தருளுவார். வரும் புதியவருடம் உங்கள்விண்ணப்பத்திற்கேற்படியெல்லாம்கர்த்தர் நினைத்தருளிஅற்புதம் செய்வார். ஏனென்றால் அன்னாளின் தேவன் நம்முடையய தேவன்.

இந்தக் குறிப்பில் கர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார் என்ற வாக்குத்தத்த தின்படி கர்த்தர் நினைத்தருளின
நான்குப் பேரைக் குறித்து சிந்தித்தோம். வரும் நாளில் தேவன் நோவாவின் உத்தமத்தை நினைத்தது போல, ஆபிரகாமின் பரிந்து
பேசும் ஜெபத்தை நினைத்ததைப்போல, ராகேலின் நிந்தையை நினைத்ததுப்போலவும் மற்றும் அன்னாளின் பொருத்தனை விண்ணப்பத்தைப் நினைத்ததுபோலவும் உங்களையும் நினைத்தருளுவார். வரும் வருடம் கர்த்தர் உன் மேல் நினைவாயிருக்கிற வருடம். மிகுந்த சந்தோஷத் தோடு கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends