உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்

உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்.
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23).
இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் பிடித்து என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியை கவனிக்கலாம். நாம் அவர் கையைப் பிடித்து இருக்கிறோம் என்று சொன்னால் நாம் சந்தோஷமாக இருக்கும் போது அல்லது மற்ற நேரங்களில் அவர் கையை விட்டுவிடுவோம். ஆனால் கர்த்தர் நம் கையைப் பிடித்திருந்தால் அந்த பிடி தளராது. கர்த்தர் நம் கையை பிடிக்கும்போது நாம் பெற்றுக்கொள்ளும் விடுதலை என்ன என்பதை இந்தக் குறிப்பில் கவனிக்கலாம். இயேசு விடுதலையின் தேவன். இயேசு தம் கையைப் பிடிக்கும்போது என்னென்ன விடுதலை என்பதை கவனிக்கலாம்.
- இயேசு கையைப் பிடிக்கும்போது ஆபத்திலிருந்து விடுதலை (ஆதி 19 : 16). லோத்து குடும்பத்திற்கு விடுதலை (2 பேது 2 : 7,8).
- இயேசு கையைப் பிடிக்கும் போது வியாதியிலிருந்து விடுதலை (மாற்கு 1 : 31). பேதுருவின் மாமி
- இயேசு கையைப் பிடிக்கும்போது சோர்விலிருந்து விடுதலை (மாற்கு 5 : 41) யவீருவின் மகள்
- இயேசு கையைப் பிடிக்கும்போது இருளிலிருந்து விடுதலை
(மாற்று 8 : 23) ஒரு குருடன் - இயேசு கையைப் பிடிக்கும்போது பிசாசின் தாக்குதல் களினின்று விடுதலை. (மாற்கு 9 : 27) ஒரு சிறு பையன்.
இயேசு உங்கள் வலது கையைப் பிடிக்கும் போது ஆபத்திலிருந்தும் வியாதியிலிருந்தும், சோர்விலிருந்தும், இருளிலிருந்தும் மற்றும் பிசாசின் அந்தக்கார சக்தியிலிருந்தும் விடுதலைத் தருகிறவர். குமாரன் விடுதலை ஆக்கினால் அது மெய்யான விடுதலை. இயேசு வாழ்நாள் முழுவதும் உன் வலது கையைப் பிடித்து நான் உனக்கு துணையிருக்கிறேன் என்று உங்களைப் பார்த்து முக முகமாய் சொல்கிறார் இதை விசுவாசிப்பீர்களாக. உங்கள் வலது கையைப் பிடித்த இயேசுவுக்கும், விடுதலை தந்த இயேசுவுக்கும் நன்றி சொல்லுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
தமிழ் பிரசங்க குறிப்பு மற்றும் பிரசங்க குறிப்புகள், வேதாகம மனிதர்கள், பிரசங்கங்கள், செய்திகள், பிரசங்க களஞ்சியம், வேத பாடம் இவைாஅனைத்தும் உங்களுக்காகவே