கர்த்தர் தேற்றுவார்

Share this page with friends

ஒருவனை அவன் தாய் தேற்றுவதைப்போல் நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா : 66 : 13.

கர்த்தர் நம்மை தேற்றுகிறவர் , ஆற்றுகிறவர் மற்றும் ஆறுதல் படுத்துகிறார் இந்தக் குறிப்பில் நம்மை எப்படியெல்லாம் தேற்றுவார் என்பதை கவனிக்கலாம்.

  1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும் சமயம் நம்மை தேற்றுவார் – எரே : 31 : 12 , 13
  2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம் வார்த்தையால் நம்மை தேற்றுவார் – சங் : 23 : 4. உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். இதில் கோல் என்பது ஆசீர்வாதமான வாக்குறிதியை குறிக்கும். தடி என்பது பாதுகாவலின் வாக்குறுதி.
  3. கர்த்தர் தம் வல்லமையான அன்பின் செயலினால் நம்மை தேற்றுவார் – சங் : 71 : 20 , 21
  4. கர்த்தரின் நியாய தீர்ப்புகள் நம்மை தேற்றுகிறது – சங் : 119 : 52
  5. சீயோனில் வாழும் பாக்கியத்தைப் பெற்றவர்களை கர்த்தர் தேற்றுகிறார் – சகரியா : 1 : 17. சீயோனின் வாழ்வு என்பது இயேசுவால் மீட்படைந்தவர்கள் வாழும் வாழ்வு.

கர்த்தர் தேற்றுவார் அவர் எப்படித் தேற்றுவா ரென்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இயேசுவே ஆறுதலின் தேவன். இயேசு ஒருவரே நம்மை தாயை விட தேற்றுகிற தேவன். இதை வாசிக்கிற கேட்கிற உங்களுக்கு இயேசு தாமே ஆறுதலையும் தேறுதலையும் தருவாராக.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends