அவனும் தெய்வமானான்

கிறிஸ்துவின் அன்பு

Share this page with friends

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24

அன்பு என்றால் என்ன?

கிறிஸ்து கொடுத்த கற்பனைகளின் படி நடப்பதே அன்பு. II John 1:6, 5:2-3, John 15:10 கிறிஸ்துவை அறிவதில் தான் அன்பு வருகிறது. ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார். I John 4:8,16, John 15 ஆம் அதிகாரம்.

கிறிஸ்து நம்மை எப்படி நேசித்தார்?

 1. அவர் முந்தி நம்மில் அன்பு கூர்ந்தார். I John 4:19
 2. அவர் முடிவுபரியந்தம் நம் மேல் அன்பு வைத்தார். John 13:1
 3. நாம் பாவிகளாக இருக்கையில் அவர் அன்பு கூர்ந்தார். ரோம் 5:8
 4. ஜீவனை கொடுத்து அன்பு கூர்ந்தார். வெளி 1:6, I John 4:9-10, 3:16 கலா 2:20 John 15:13

அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாத அன்பு, எபே 3:19, சத்தியத்தின் அன்பு, அழியாத அன்பு, எபே 6:24, II தெச 2:10 அவரது அன்பு ஐஸ்வரியம் நிறைந்தது. எபே 2:4

இந்த அன்பில் இணைக்கப்படவே கர்த்தர் நம்மை அழைத்து இருக்கிறார். கொலோ 2:2

கிறிஸ்துவின் அன்பின் தாக்கம்

 1. இது பயத்தை போக்கிறது. I John 4:18
 2. திரளான பாவங்களை மூடும் II
  Peter 4:8
 3. நெருக்கி ஏவி பிராயாசப்பட வைக்கும். எபி 6:10, II Cor 5:14, I Thesa 1:2, கலா 5:6, 13
 4. கடிந்து கொள்ளும் சிட்ச்சிக்கும் எபி 12:6, யாக் 1:12 II Cor 2:4
 5. பொல்லாங்கு செய்யாது ரோம 13:10

இன்னும் அன்பின் குணத்தை 1 கொரி 13 ஆம் அதிகாரத்தை வாசித்தால் புரியும்.

இந்த அன்பை என்ன செய்ய வேண்டும்?

அன்பை நாடவேண்டும். I Cor 14:1

வேரூன்றி நிலைபெற வேண்டும். எபே 3:17

விட்டு பிரியாதிருக்க வேண்டும் ரோம 8:36-39

வளர வேண்டும்/ ஊக்கமாக அன்பு கூர வேண்டும் எபே 5:2, I Peter 1:22, 4:8

நமது அன்பில் மாயம் இருக்க கூடாது, பரிசுத்தம் தேவைப்படுகிறது. II Cor 6:6

அன்பை காட்ட வேண்டும், வழங்க வேண்டும் II Peter 1:7, Philo 4

அன்பை தரித்து கொள்ள வேண்டும் கொலோ 3:14, I Thes 5:8

அன்பை விசுவாசிக்க வேண்டும் I John 4:16

இந்த அன்பினால் நாம் யாரிடத்தில் அன்பு கூர வேண்டும்?

A. கிறிஸ்துவினடத்தில் அன்பு கூர வேண்டும் இல்லையெனில் அவன் சபிக்க பட்டவன். I Cor 16:22 எபே 6:24 லூக் 10:27

B. பிறரை நேசிக்க வேண்டும். மார்க் 12:31, கலா 5:14, ரோம 13:9

C. ஒருவருக்கொருவர் John 13:35, II Thes 1:3 Rom 13:8

D. மனைவிகள் சொந்த புருசரை நேசிக்க வேண்டும். தீத்து 2:4

E. கணவர்கள் சொந்த மனைவிகளை கசந்து கொள்ளாமல் நேசிக்க வேண்டும். கொலோ 3:19, எபே 5:25, 28 & 33

F. பெற்றார் பிள்ளைகளை நேசிக்க வேண்டும் Titus 2:4

G. பரிசுத்தவான்கள் மற்றும் சபையை நேசிக்க வேண்டும். எபி 6:10, எபே 1:15, 3:18 கொலோ 1:3 பிலோ 7

இப்படி அன்பில் மாதிரியாக இருக்க வேண்டும். அந்த கிறிஸ்துவின் அன்பில் பெருக வேண்டும். I Tim 4:12, I Thes 4:10 ஏனெனில் இந்த அன்பே பெரியது. I Cor 13:13

இவ்விதமாக நாம் ஒருவரில் ஒருவர் அன்பு கூர கடனாளிகளாக இருக்கிறோம். I John 4:11-12 அப்படி நாம் அன்பு கூர்ந்தால் கிறிஸ்து நம்மில் நிலைத்து இருக்கிறார்.

இந்த அன்பை பெறுவது எப்படி?

இது பரிசுத்த ஆவியினால் உண்டாகிறது. இவருக்கு அன்பின் ஆவியானவர் என்றும் ஒரு பெயர் உண்டு. இவரே நம்மை கிறிஸ்துவின் அன்பினால் நிரப்புகிறவர். எனவே அவரில் நிறைந்த ஒரு வாழ்வு எப்போதும் நம்மை அன்பில் வைத்துக்கொள்ளும். கலா 5:22, ரோம 15:32, 5:5, II Tim 1:7.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே கடைசி நாட்களில் அன்பு தணிந்து போகின்ற இந்த நாட்களில் வாழ்கின்ற மத் 24:12, ரோம 1:31 & II 3:3, நாம் இந்த அழிந்து போகும் உலகத்தில் அன்பு கூறாமல் I John 2:15, பெற்ற அன்பை காத்துகொள்வோம் யூதா 21 ஏனெனில் அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம். கர்த்தர் அன்பாகவே இருக்கிறார். கர்த்தர் சீக்கிரம் வருகின்றார். நீ என்னை நேசிக்கிராயா? என்று பேதிருவிடம் கர்த்தர் கேட்கும் சப்தம் நம் காதிலும் தொனிக்கட்டும் ஏனெனில் அவர் வருகையில் அவரை நேசிப்போர் தான் மீட்கப்பட முடியும்

செலின்


Share this page with friends