கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் !

பிரசங்க குறிப்பு
கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் !
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர். உம்முடைய காருணியம் என்னை பெரியவனாக்கும். (2 சாமு 22 : 36)
கரத்தர் இந்த புத்தாண்டில் ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டு கர்த்தருடைய காருணியம் உங்களை பெரியவனாக்கும். அவர் காருணியம் என்ற கேட்கத்தினால் நம்மை சூழ்ந்துக்கொள்வார். (சங் : 12). காருணியத்தால் நம்மை இழுத்துக்கொள்வார்.
எரே : 31 : 3. என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த மகிமையான அழைப்பை தந்தது அவருடைய காருணியமே. 2 பேது : 1 : 3. நம்மை பெரியவர்களாக்கும் காருணியமே பெரிது என்று வேதம் சொல்கிறது. சகரி : 9:17 நாம் பல்வேறு நிலைகளில் பெரியவர்களா வோம் என்பது உண்மையே. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவருடைய காருணியத்தினால் எவ்விதத்தில் பெரியவர்களானார்கள் இதைக் குறித்து சிந்திப்போம். அவர்கள் பெரியவர்களாய் மாறியதைப்போல கர்த்தருடைய காருணியம் நம்மையும் பெரியவர்களாக்கும்.
- கர்த்தருடைய காருணியம் நம்மை தொழிலில் பெரியவர்களாக்கும். (ஆதி 26 : 13). ஈசாக்கு
- கர்த்தருடைய காருணியம் நம்மைவரங்களில் பெரியவர்களாக்கும். (1 சாமு : 9 : 16).
சாமுவேல். - கர்த்தருடைய காருணியம் நம்மை சாட்சியில் பெரியவர் காளாக்கும். (1 நாளா 29 : 25) சாலொமோன்
- கர்த்தருடைய காருணியம் நம்மை
உதாரத்துவத்தில் பெரியவர்களாக்கும் (யோபு 1 : 3) யோபு - கர்த்தருடைய காருணியம் உலக வேலைகளில் நம்மை பெரியவர் களாக்கும். (தானி 2 : 48) தானியேல். கர்த்தருடைய காருணியம் நம்மை ஊழியத்தில் பெரியவர்களாக்கும் (மத் 11 : 11) யோவான் ஸ்நானம்
கர்த்தருடைய காருணியம் வேதத்தில் சில பரிசுத்தவான்களை பெரியவர்களாய் மாற்றியது. அதுபோல இந்த வருடம் கர்த்தரது காருணியம் நம்மை பெரியவன்களாக மாற்றும். நாம் எதிலெல்லாம் பெரியவனாக விளங்கவேண்டுமோ கர்த்தருடைய காருணியம் அப்படியே செய்யும். கர்த்தருடைய காருணியம் இந்த வருடம் நம்மேல் இருப்பதற்காக கர்த்தருக்கு நன்றிசொல்வோம். உண்மையாய் இந்த வருடம் கர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் விசுவாசிப்பீர்களாக !
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.