இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

Share this page with friends

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15

இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு கேட்ட கேள்வி. இந்த இயேசுவை அவள் கண்ணீரோடு தேடினவள். மத் : 8 : 2 ன் தமது ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்தவள். இவளுக்குள் இருந்த ஏழு பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஏன் அழுகிறாய் ? என்ற
கேள்வி ஆண்டவர் மரியாளை மாத்திரம் கேட்க்கவில்லை , நம்மைப் பார்த்தும் கேட்கிறார். யாரை தேடுகிறாய் ? இந்தக் கேள்வி பலவிதத்திலும் ஆழமானக் கேள்வி. இந்தக் குறிப்பில் நாம் எதையெல்லாம் தேடக்கூடாது ? நாம் எதையெல்லாம் தேட வேண்டும் ? இதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

நாம் எதையெல்லாம் தேடக்கூடாது ?

 1. ஆளுகிறவனின் ஆதரவைத் தேடாதே. நீதி : 29 : 26
 2. பெத்தேலை தேடாதே. ஆமோஸ் : 5 : 5
 3. அற்புதங்களையும் அடையாளங்களையும் தேடாதே. மாற்கு : 8 : 12
 4. குறிசொல்லுகிறவர்களைத் தேடாதே. 1 சாமு : 28 : 7
 5. உலக அதிகாரத்தை தேடாதே. எண் : 16 : 10
 6. உன் சத்துருவின் அழிவைத் தேடாதே. 1 சாமு : 26 : 20

நாம் எதையெல்லாம் தேட வேண்டும் ?

 1. கர்த்தரை தேடுங்கள். ஆமோஸ் : 5 : 4 , 6
 2. தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுங்கள். மத் : 6 : 33
 3. புத்தியை தேடுங்கள். நீதி : 2 : 4 , 5
 4. மற்றவர்களின் பிரயோஜனத்தை தேடுங்கள். 2 கொரி : 12 : 14
 5. சமாதானத்தை தேடுங்கள். 1 பேது : 3 : 11.

நாம் இந்தக் குறிப்பில் நாம் எதைத் தேடவேண்டும் , நாம் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதைக் குறித்து சிந்தித்தோம். அன்று மரியாள் கண்ணீரோடு இயேசுவை தேடினாள். நாமும் தேடவேண்டியதை தேடி , தேட வேண்டாததை தேடாமல் விட்டுவிடவேண்டும். இயேசு உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக !

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends