எசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்

Share this page with friends

அந்நாட்களில் எசேக்கியா வியாதிபட்டு மரணத்துக்கு ஏதுவாய் இருந்தான். அவன் கர்த்தரை நோக்கிஜெபம்பண்ணும்போது
அவர் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணி
அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்
(2 நாளாக 32 : 24), (ஏசாயா 38 : 1-22), (சங் 34 : 17-20), (அப் 10 : 1-4)

சேக்கியா ஒரு இராஜா வாயிருந்தும் தன்வியாதிகள் மத்தியிலும் அவன் பரிகாரிகளைத் தேடாமல் கர்த்தரை நோக்கி ஜெபித்து வாக்குத்தத்ததில் நம்பிக்கை வைத்தான் எசேக்கியா நம்பிக்கையில் சிறந்த இராஜா. மூன்று இராஜாக்கள் மிக முக்கியமானவர்கள் அதில் ஞானத்தில் சிறந்த சாலெமென் இராஜா, நம்பிக்கையில் சிறந்த எசேக்கியா இராஜா , கர்த்தரை தேடுவதில் சிறந்த ஊசியா இராஜா. எசேக்கியா இராஜாவின் ஜெபம் அவனது வாழ்க்கையில் அற்புதத்தை செய்தது. இதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

வேத பாடம்
ஏசாயா : 38 : 1 — 22

  1. எசேக்கியா வியாதியினிமித்தம் மரணவாக்கை பெற்றான் (ஏசாயா 38 : 1)
  2. எசேக்கியா மரணவாக்கினிமித்தம் கர்த்தரை நோக்கி ஜெபித்தான்.(ஏசாயா 38 : 2 , 3)
  3. எசேக்கியா தமது ஜெபத்தினால் வாக்குத்தத்தம் பெற்றான் (ஏசாயா 38 : 5-7).
  4. எசேக்கியா வாக்குத்தத்தினால் அற்புதம் அடைந்தான்
    (ஏசாயா 38 : 9)
  5. எசேக்கியா அற்புதத்தினிமித்தம் சாட்சி சொன்னான் (ஏசாயா 38 : 9-20)
  6. எசேக்கியா தமது சாட்சியினிமித்தம் கர்த்தரின் ஆலயம் சென்றான். (ஏசாயா 38 : 22)

எசேக்கியாவின் ஜெபம் அவனுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை செய்யவைத்தது. எசேக்கியாவின் ஜெபம் தேவனுக்கு பிரியமாக இருந்தது. ஜெப வாழ்வு என்பது ஒரு ஒழுங்கு முறைக்குட்பட்டது. இந்த ஒழுங்கின்முறை ஜெபித்தால் விடுதலையும், சுகமும் பெலனும் ஆரோக்கியமும் அற்புதமும் நிச்சயம் நடக்கும். எசேக்கியா வின் தேவன் நம்முடைய தேவன்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends