கர்த்தருடைய பர்வதம்

Share this page with friends

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் ? (சங் : 15 : 1)

இந்தக் குறிப்பில் அவருடைய கூடாரத்தில் தங்குவதற்கும் அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறதற்கும் தகுதியுடையவராக விளங்குபவர்கள் யார் என்பதை வேத வசனங்கள் மூலம் நாம் சிந்திக்கலாம்.

வேத பாடம்
சங் : 15 : 1 — 5

கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறேன் யார் ?

 1. நடக்கையில் உத்தமன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
  (சங் : 15 : 2 , 26 : 1), (ஆதி : 17 : 1), (2 நாளாக : 16 : 9)
 2. நீதியை நடப்பிக்கிறவன் கர்த்தருடைய பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
  (சங் : 15 : 2), (தீத்து : 2 : 12)
 3. சத்தியத்தை பேசுகிறவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
  (சங் : 15 : 2), (யோபு : 33 : 3), (சகரியா : 8 : 16)
 4. புறங்கூறாதவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
  (சங் : 15 : 3) , (லேவி : 19 : 16)
 5. நிந்தையான பேச்சை பேசாதவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
  (சங் : 15 : 3), (யோபு : 34 : 3)
 6. ஆகாதவனைத்தீழ்ப்பாக எண்ணுகிறவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்
  (சங் : 15 : 4), (தீத்து : 1 : 16), (1 கொரி ; 9 : 27)
 7. கர்த்தருக்கு பயந்தவர்களைக் கனம் பண்ணுகிறவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்
  (சங் : 15 : 4), (ரோமர் : 12 : 10)
 8. சொல் தவறாதவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். (சங் : 15 : 4)
 9. பணத்தை வட்டிக்குக் கொடாதவன் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். (சங் : 15 : 5)
 10. பரிதானம் வாங்காமலிருப்பவன் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். (சங் : 15 : 5)

மேற்க்கண்ட தன்மைகளை பெற்றவர்கள் தான் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறமுடியும் நமக்கு இபாபடிப்பட்ட தன்மைகள் உங்களுக்கு இருக்குமானால் நீங்களும் கர்த்தருடையய பர்வதத்தில் வாசம் பண்ணமுடியும். அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ண நாம் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends