இச்சையடக்கம் என்னும் சுபாவம்

Share this page with friends

பந்தயத்தில் போராடுகிறவர்கள் எல்லாவற்றிலும் இச்சையடக்கமாக இருப்பார்கள் I Cor 9:25

வாழ்வியல் முன்னேற்றத்தில் இந்த இச்சையடக்கம் என்னும் சுபாவம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இது ஒரு ஆவிக்குரிய கனி. வாழ்வியல் வெற்றிக்கு இது மிகவும் அடித்தளம் அமைக்கிறது. கடைசி நாட்களில் இந்த சுபாவம் மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. எனவே ஞானத்தோடு இந்த சுபாவத்தை கூட்டி கொள்ள வேண்டும் என்று பரிசுத்த பேதுரு சொல்கிறார். இந்த சுபாவத்தை நாம் தொடர்ந்து எப்படி வளர்க்க வேண்டும் என்றும் எவைகளில் நாம் இந்த சுபாவத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் இசையடக்கத்தின் அடையாளங்கள் என்ன என்று தொடர்ந்து கவனிப்போம்.

A. ஆவி ஆத்துமா மற்றும் சிந்தைகளை அடக்குதல்.

நமது ஆவி ஆத்துமா மற்றும் இருதயங்களில் இருந்து தான் இந்த சுபாவம் வெளிப்படுகிறது. எனெனில் இது உள்ளுக்குள் மறைந்து இருக்கும் ஒரு நல்ல சுபாவம். கிறிஸ்துவில் நமது மனம் புதிதாக மாறும் போது இந்த சுபாவமும் வளர்கிறது. கட்டப்பாடு இங்கு இருந்து தான் ஆரம்பிக்கும். என்ன பார்க்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எங்கு உட்கார வேண்டும், யாரோடு பழக வேண்டும் என்கிற தீர்மானம் எடுத்து செயல் பட கர்த்தர் பூரண சுதந்திரம் தந்து இருக்கிறார். ஆனால் நமது மனதின் சிந்தையின் விளைவுகள் நாம் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் தான் வருகிறது. கண்களோடு உடன்படிக்கை செய்த யோபுவும், தன்னை தீட்டு படுத்த மாட்டேன் என்று தீர்மானம் எடுத்த தானியேல், தனது எஜமானுக்கு தான் துரோகம் செய்ய கூடாது என்றும் தான் தேவனுக்கு பயப்படுகிறவன் என்று பாவத்திற்கு விலகின யோசேப்பு, தன் மனம் விசனம் அடைந்து மரணதிற்கு ஏதுவாக தன் இருதயத்தை எல்லாம் உற்றி விட்ட சிம்சோனும் தங்கள் தங்கள் தீர்மானங்களுக்கு ஏற்ற விளைவுகளை வாழ்வில் ஏற்று கொண்டனர். எனவே! நமது ஆவியை அடக்கி, ஆத்துமாவை அமர பண்ணி, அறிவை சேமித்து, ஞானத்தை பேணி, ரகசியத்தை காத்து வருகிறவர்கள் இச்சையடக்கம் என்கிற பலனில் வாழ்வில் மகிழ்ந்து இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனெனில் ஆவியை அடக்கி வாழ்பவர்கள் தங்கள் ஆத்துமாவை காத்து கொண்டு தங்கள் சிந்தையில் மருறுபம் அடைந்து உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஞானி ரகசியம் மற்றும் அறுவை காத்து கொள்கிறான். இந்த மண்பாண்ட சரீரத்தில் தான் விலையேர பெற்ற தேவ ராஜ்யத்தின் பொக்கிஷ ரகசியத்தை கர்த்தர் தந்து இருக்கிறார். அதை காத்து கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். தரிசனம் குறித்த காலத்திற்கு வைக்க பட்டு இருக்கிறது. அதை காத்து ஏற்ற காலத்தில் சரியான நேரத்தில் வெளிப்படுத்துகிறவர்கள் கிருபை மெய்யாகவே பெற்றவர்கள் தான்.

B. நாவை மற்றும் வார்த்தைகளை அடக்க வேண்டும்.

மிருக சுபாவம் கூட மனித சுபாவத்தை கொண்டு அடக்க படும் ஆனால் நாவை அடக்க யாராலும் கூடாது என்று வசனம் சொல்கிறது. ஆனாலும் இச்சையடக்கம் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குவார்கள். நாவை அடக்காமல் தேவ பக்தி என்று சொன்னால் அது வீணாகி விடும். புத்திமான் நாவை அடக்குவான் என்று வசனம் சொல்கிறது. நாவை கோள் சொல்லுதல், குற்றம் சாட்டும் வார்த்தைகள், எதிர் மறையான முறையில் பேசுதல், கெட்ட வார்த்தை பேசுதல், பரியாசம் செய்தல், பொய் பேசுதல் போன்ற காரியங்களுக்கு விலக்கி கொள்ள வேண்டும். நாவில் துதி, கிருபை மற்றும் அறிவாகிய வசனம், சுவிசேஷம், மற்றும் விசுவாச வார்த்தைகள் இடம் பெற வேண்டும். சத்தியத்தை அடக்காமல் பேசுகிறவர்கள் ஆக இருக்க வேண்டும். ஸ்தீரிகள் மனம் பதறி பேசாமல் நாவை அடக்கி காத்து கொள்ள வேண்டும். அதுவே இச்சையடக்கத்தின் இரண்டாவது அடையாளம்.

C. உணர்ச்சிகளை அடக்க வேண்டும்.

மனிதன் உணர்வில் பின்னி பிணைந்து இருந்தாலும் அவைகளில் ஆரோக்கிய முள்ள உணர்வுகளை அறிந்து மற்றவைகளை அடக்க அறிந்து இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணர்வுகள் நம்மை சரியான இடத்தில் உட்கார வைக்கும். கடமை தவறி, நேரம் தவறி செயல்பட்ட தாவீது தன் உணர்ச்சிக்கு தன்னை விட்டு கொடுத்து பின்னர் வருந்து மனம் திரும்பிய சரித்திரம் நமக்கு திருஸ்டான்தமாக கொடுக்க பட்டுள்ளது. ஆனால் யோசேப்பு தன் உணர்ச்சியை கட்டு படுத்தி பின்னர் வெளிப்படுத்துகிறதை அவரது சகோதரர் விசயத்தில் நாம் பார்க்க முடியும். இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த சூழலிலும் தனது உணர்வுகளை எதிர்மறையாக வெளிப்படுத்தாமல் அவைகளை அடக்கி வெற்றி சிரந்தார். ஆனால் ஆமான் தனது உணர்வுகளை தற்காலிகமாக அடக்கி வீட்டில் போய் தனது மனைவி மற்றும் உடன் நபர்களின் ஆலோசனைக்கு கட்டு பட்டு பழி வாங்க முயற்சி செய்து தான் வெட்டின குழியில் தானே விழுந்து போனான்.

D. கடைசியாக நம் கால்கள் அடக்கப் பட வேண்டும்.

கால் துரிதமாக நடக்கிரவன் வழி தப்பி நடக்கிறான். பார்வையில் கட்டு பாடு இருப்பது எப்படி முக்கியமோ அதே போல், பார்வைக்கு ஏற்றபடி செயல்படாத படி நிதானித்து செயல் படும் கால்கள் நமக்கு தேவை. எங்கு செல்கிறோம், என்ன செய்கிறோம் என்கிற விடயத்தில் அடக்கம் தேவை. கர்த்தர் சமூகத்தில் தரித்து நிற்கிற காலும் சுவிசேஷம் அறிவிக்கிற காலும் ஒரு நாளும் தோற்று போணத்தில்லை. எனவே நம் காலுக்கு சுவிசேஷம் என்னும் காலணி மிகவும் அவசியம். தேவை இல்லாமல், தன் காலை அடக்கமாமல் ஊர் சுற்றி பார்க்க போன தீனான் தீட்டு பட்டு போனதை நாம் நன்கு அறிவோம். இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார். சிலருக்கு பொல்லாத காரியங்களில் திரியா வரம் உண்டு. என்ன சூழல் இருந்தாலும் நம் கால்கள் கர்த்தர் நமக்கு தந்த இடங்களில் தரித்து நிற்க வேண்டும் ஏனெனில் தேவாலய காலடிகள் சாட்சி பகரும். தேவாலயத்தில் அதாவது தேவ சமூகத்தில் நமது கால் நிற்க வேண்டும். கர்த்தர் தாமே நமது மனதை அடக்கி, நாவை அடக்கி, உணர்ச்சிகளை அடக்கி, கால நடைகளை அடக்கி இச்சை அடக்கத்தினால் நிறைத்து கிறிஸ்துவில் உறுதி படுத்தி ஸ்திர படுத்துவாராக.

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends