விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)
பாழாய்ப் போன பாலாக்
பிலேயாமை வைத்து
போட்ட மந்திர திட்டங்கள்
பலிக்கவில்லை.
சபிக்க வந்த பிலேயாம்
பேசின தீர்க்கதரிசன
வார்த்தைகளை
பாலாக் முழுவதுமாய்க்
கேட்டுவிட்டான்
மூன்று முறை ஆசீர்வதித்த
பிலேயாமை
முறைத்துப் பார்த்து
ஆமானை போல
ஆத்திரமடைந்துவிட்டான்
பிலேயாமின்
ஆலோசனையினால்
இஸ்ரவேல்
தீட்டுப்பட்டுப்போயிற்று
தேவனுக்கு கீழ்படியாதபடி
யூதர்களை பாலாக்
வஞ்சித்துவிட்டான்
பாழாக்குகிறவனான
பாலாக்
இஸ்ரவேலரை
மோவாபியரின்
மத விருந்துக்கு
(Religious Feast)
அழைத்தான்
(எண்ணாகமம் 31:16)
விருந்துதான்
அவன் வைத்த மருந்து!
அங்கே மோவாபின்
குமாரத்திகளோடே
வேசித்தனம்பண்ணி
மத விருந்தில்
மயங்கி பாவத்தில்
விழுந்துவிட்டார்கள்.
மந்திரத்தினால்
சாதிக்க முடியாததை
தந்திரத்தினால்
சாதித்துவிட்டான்
பாலாக்
தந்திரத்தைச் சொல்லிக்
கொடுத்தது
பேயோரின் குமாரன்.
Pay வாங்கி
மந்திரம்பண்ணி தந்திரத்தைச்
சொல்லிக்கொடுத்தவன்
பேயோரின் குமாரன் பிலேயாம்!
மோசே ஏற்கனவே இதைக்
குறித்து எச்சரித்திருந்தார்
(யாத்திராகமம் 34:10-17)
ஜாதிகளோடே கலவாமல்
தனியே வாசம்பண்ணிய
இஸ்ரவேலர் பாவத்திற்கு
பச்சைக் கொடி காட்டி
(எண்ணாகமம் 23:9)
இச்சையில் வழுக்கி விழுந்து
தங்களது சிறப்பு அந்தஸ்தை
இழந்துபோனார்கள்.
The result?
இருபத்து நாலாயிரம்
யூதர்கள்
வாலிபர்களின் Father’கள்
பாதை மாறியதால்
கர்த்தர் அனுப்பிய வாதையில்
சிக்கி காலத்திற்கு முன்னே
காலாவதியாகிப்போனார்கள்
வாதையைத் தடுத்தது
தலைவன் மோசே அல்ல
ஆசாரியன் எலெயாசரும் அல்ல.
ஆனால் எலெயாசரின் மகன்
பினெகாஸ்
இவன்தான் சீறிப் பாய்ந்து
அந்த இருவரையும் கொன்று
வாதையைத் தடுத்தான்
சபாஷ் பினெகாஸ்
சாவுகளைத் தடுத்த உன்னை
சங்கீதக்காரன்
எழுதிவைத்திருக்கிறான்
தேவன் மீது அவன்
வைத்திருந்த
பக்தி வைராக்கியம்
பினெகாஸ்.- ஐ
ஏவி எழுப்பி இந்த செயலை
செய்யவைத்தது.
இதனால் இவனுக்கு ஒரு
சிறப்பு அந்தஸ்தை தேவன்
கொடுத்தார்
(சங்கீதம் 106:28-31)
பினெகாஸ் சரியான நேரத்தில்
எழும்பாமல் இருந்திருந்தால்
சாவு எண்ணிக்கை இரட்டிப்பாய்
போயிருக்குமே!
சத்துருக்களுக்கு எதிராகத்தான்
நிற்க வேண்டுமேயன்றி
சமரசமாய் போய்விடக்கூடாது.
(2 கொரிந்தியர் 6:14-18)
எதிராளியாகிய சத்துரு
கெர்ச்சிக்கிற சிங்கம் போல
வரமுடியவில்லையென்றால்
(1 பேதுரு 5:8)
அவன் வஞ்சிக்கிற
சர்ப்பத்தைப் போல
வருவான் (2 கொரிந்தியர் 11:3)
இரண்டுக்குமே ஒரு கர்த்தருடைய
பிள்ளை ஜாக்கிரதையாய்
இருக்கவேண்டும்.
இரண்டாவது கணக்கெடுப்பு
துவங்கியதன் காரணம்
வனாந்திர அலைச்சல்
முடிவுக்கு வரப்போகிறது.
தாத்தான், அபிராம் இருவரையும்
கர்த்தர் வட்டமிட்டுக் காட்டுகிறார்
(எண்ணாகமம் 26:9-11)
நாதாபும் அபியூவும்
கர்த்தருடைய சந்நிதியில்
அந்நிய அக்கினியைக்
கொண்டுவந்தபோது
செத்துப்போனார்கள்
(எண்ணாகமம் 26:61)
கடைசியாக
யோசுவாவும் காலேபும்
கர்த்தரை நம்பி
பயணத்தைத்
தொடர்ந்தார்கள்.
கானானுக்குள்ளே
நுழைந்தார்கள்.
கர்த்தரை நம்பி
விசுவாசப் பயணத்தைத்
தொடருவோம்.

பாஸ்டர்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
நல்லாசான்
சர்வதேச விருது – மலேசியா – 2021