போதகர் மனைவியின்..

Share this page with friends

போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில்

1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர்.

2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர்.

3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர்.

4. அவர் உங்கள்மீது கை வைக்காமலிருக்கலாம். ஆனால் உங்களுக்காக ஜெபிப்பவர் மீது கை வைப்பவர்.

5. அவர் அழுவதற்கு உங்களுக்கு தோள் கொடுக்காமலிருக்கலாம். ஆனால் யாரிடம் அழுகிறீர்களோ அவருக்கு தோள் கொடுப்பவர்.

6. அவர் உங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் தீர்க்கதரிசிக்கு தீர்க்கதரிசனம் சொல்பவர்.

7. அவர் பெலவீனபாத்திரமாயிருக்கலாம். ஆனால் உங்கள் போதகரை பெலசாலியாக மாற்றுபவர் அவரே.

8. அவர் உங்கள் போதகரை ஓநாய்களிடமிருந்தும் இருளின் ஏஜெண்டுகளிடமிருந்தும் பாதுகாப்பவர்.

உங்கள் போதகரின் மனைவிக்கு ஒரு நல்ல பரிசை கொடுத்து உங்களை கவனித்துக்கொள்பவரை கவனித்துக்கொள்வதற்காக நன்றி சொல்லுங்கள்.

அவர் ஒரு அருமையான வெகுமதி.

தேவன் தாமே ஒவ்வொரு போதகரின் மனைவியையும் ஆசிர்வதித்து பலனளிப்பாராக. இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Share this page with friends