தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்

Share this page with friends

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இயங்கி வந்த தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் (டிசிஎன் மீடியா) என்ற பிரபல யூடியூப் சேனல் மர்ம நபர்களால் கைப்பற்றப்பட்டு திருடப்பட்டுள்ளது. கோரிக்கைக்கு பின் 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்

மதுரை; 5, பிப்ரவரி 2021

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் யூடியூப் சேனல் 2015 ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த ஆன்மீக எழுத்தாளர் பெவிஸ்டன் என்பவரால் துவங்கப்பட்டது. இந்த ஊடகத்தினை இரண்டு இலட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரம் உறுப்பினர்களுக்கு மேல் பின் தொடருகின்றனர். பல கோடி மக்களால் அறியப்பட்ட இந்த சேனலானது கடந்த 2021 பிப்ரவரி 4ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. முன்னதாக கொள்ளையர்கள் முன் அனுமதியின்றி சேனலுக்கு பெயர் மாற்றம் செய்து யூடியூப் கொள்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு சில நிமிடங்கள் நேரலை செய்துள்ளனர். பின்னர் அந்த காணொளியை காரணம் காட்டி முழு சேனலும் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் யூடியூப் சேனலானது யூடியூப் தளத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, சில்வர் விருது பெற்ற ஒரு நடுநிலை கிறிஸ்தவ ஊடகமாகும். யூடியூப் நிறுவனத்தின் அனைத்து சட்ட விதிகளுக்குட்பட்டு ஆராய்ந்த பின்னரே வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கம். மேலும் பாதுகாப்பு கருதி இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதியும் மின்னஞ்சல் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்களால் இந்த ஊடகம் கைப்பற்றப்பட்டு, விதி மீறல் ஏற்படும் வகையில் நேரலை செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் ஸ்தாபன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கிறிஸ்தவ நடப்பு செய்திகள், கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்திகளை நடுநிலையோடு வழங்கி வந்த இந்த ஊடகம் திருடப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் யூடியூப் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த சேனலை அனைத்து வீடியோக்களுடன் மீட்டு தரக்கோரியும், அவசியப்பட்டால் சைபர் கிரைம் அலுவுலகத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

செய்தி அறிந்தவுடன் திருவணாமலையை சார்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் சாம் சாலமோன் பிரபு ஆலோசனையின்படி யூடியூப் நிர்வாகத்தினை முறையாக தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்குள் உரிய விசாரணை செய்து தீர்வு காண்பதாக யூடியூப் நிர்வாக தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பாகுபாடின்றி பலருக்கு ஆசீர்வாதமாக இருந்து வந்த நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் யூடியூப் சேனல் கால தாமதமின்றி விரைவில் திரும்ப கிடைக்கவும், நமக்கு எதிராக செயல்படுகிற எதிரான ஆயுதங்கள் வாய்காதே போகவும் தயவாய் ஜெபித்துக்கெள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!


Share this page with friends