கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

Share this page with friends

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்காலிகமாகத் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் மக்களுடன் இனி கொரோனாவும் வாழும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது கொரோனா தொற்றை விட வீரியமான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த ஃபாதர் செர்ஜி என்பவர் கொரோனா போலி என கூறியுள்ளார். இவர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலத்திலிருந்தே, தவறான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் தேவாலயத்திற்கு வரும் மக்களிடமும் கொரோனா குறித்து தவறான கருத்துகளைக் கூறினார்.

இதனால் இவருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், இவர் கொரோனா ஒரு போலியான நோய் என்று தொடர்ந்து கூறிவந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Thanks for

“News Tamil”
“Daily hunt news”

குறிப்பு:

மருத்துவ குழுவுடன் உலக நாடுகள் இணைந்து பல ஆய்வுகள் நடத்தி கொரோனா பற்றிய விழிப்புணர்வை அரசு மூலம் ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையை தேவனுடைய ஊழியர்கள் ஞானத்துடன் கையாள வேண்டும். சமூகத்தை இந்த கொடிய கிருமியிடமிருந்து காப்பாற்ற அரசுயெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமையாகும். தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் போடுதல் போன்ற அறிவுரைகளை நமது திருச்சபைகளில் மக்களுக்கு வழங்குவது அவசியமானதாகும்.

tcnmedia

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!
இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ரா...
ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!
உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் - முழுமையான விப...
ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு
தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கே...
போப்பாண்டவரை சந்தித்த அறிஞர் அண்ணா
கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் தெரியாத அரசு சார்ந்த உயர் பதவிகள்

Share this page with friends