பிலாத்துவின் பிரச்சனை
சின்னச் சின்ன செய்திகள் : 8

தண்ணீரைக் கண்டதும் பிலாத்துவுக்கு
ஒரு பழக்கதோஷம் என்னவென்றால்
உடனே கைகளைக் கழுவுவார்
இது இயேசுவை சிலுவையில் அறைய
ஒப்புக்கொடுத்தபோது,
தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு
முன்பாக கைகளைக் கழுவி,
இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு
நான் குற்றமற்றவன். நீங்களே
பார்த்துக்கொள்ளுங்கள் என்றானே!
அதுமுதல் அவனை இனம்புரியா வியாதி
தொற்றிக்கொண்டது!
தண்ணீரைக் கண்டதும் நிதி மந்திரிக்கு
ஒரு யோசனை பிறந்தது
பிலிப்புவிடம் கேட்டார், தண்ணீர் இருக்கிறதே
நான் ஞானஸ்நானம் பெற தடை என்ன? என்றான்
நீர் (முழுக்கு ஞானஸ்நானம் பெற)
முழுஇருதயத்தோடு
விசுவாசத்தால் தடையில்லை என்றான்
அந்த நிமிடமே தண்ணீரில் இறங்கி
ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான்

தண்ணீர் நிறைந்த குளங்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறது
தடை என்பது மனித இனத்தின் இதயத்தில் மட்டும்
தேங்கியிருக்கிறது
தடையை நீக்கி விசுவாசித்துவிட்டால் போதும்
இதயத்திலிருந்து நித்திய காலமாய் ஊறுகிற
நீரூற்றைப் போல ஜீவத்தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடும்.
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14