கேதுரு மரம்

ஆச்சரியப்படுத்தும் கேதுரு மரத்தின் ஆசீர்வாதம்

Share this page with friends

தேவனாகிய கர்த்தர் நமக்கு படைத்த ஒவ்வொன்றும் மிகவும் ஆச்சரியமானது. பூமியை படைத்த கர்த்தர் அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருப்பதைக் கண்டு பூமியின் மேல் பிரகாசிக்கும் படிக்கு இரண்டு மகத்தான சுடர்கள் உண்டாக்கினார் ஒன்று சூரியன் இரண்டாவது சந்திரன். இந்த இரண்டு சுடர்களும் பூமியை பிரகாசிக்க வைத்தன.

ஆனால் பூமியானது வெறுமையாய் இருந்தது. அந்த வெறுமையான பூமியை பசுமையாக மாற்ற புல் பூண்டுகளையும் விதைகளை கொடுக்கும் விருட்சங்களையும் (மரங்கள்) படைத்தார் அவ்வாறு பசுமையான மரங்கள் படைத்த பிறகுதான் பூமியானது பார்ப்பதற்கு அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சி யாகவும் காணப்பட்டது.

இன்று பூமியில் 3.04 டிரில்லியன் மரங்கள் இருப்பதாக சொல்லப்படு கிறது. (ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி) அதாவது பூமியில் உள்ள ஒரு நபருக்கு மரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் மரங்கள் இழக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அதாவது மனித நாகரீகம் தொடங்கிய திலிருந்து 46 சதவிகித மரங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

இந்தியாவில் 35 மில்லியன் மரங்கள் இருப்பதாகவும், நபர் ஒருவருக்கு 28 மரங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையுள்ள மரங்கள் பூமியில் இருந்தாலும், பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சில மரங்கள் விசேஷித்த வகை மரங்களாக கூறப்பட்டுள்ளது. அப்படி விசேஷித்த மரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவே இக்கட்டுரையின் நோக்கம்.

Ceder Tree

கேதுரு மரம்:

இவ்வகை மரங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடிக்கு மேலே அமைந்திருக்கும். மலைகளில் தான் காணப்படும் இவ்வகை மரங்கள் மலை சிகரங்கள் அதிகம் கொண்ட லீபனோன் (இன்றைய லெபனான்) துருக்கி, சீப்புரு தீவு ஆகிய பகுதி களிலும் பாலஸ்தீனத்தின் வடமேற்கு பகுதிகளிலும் காணப்படுகிறது

இஸ்ரவேல் நாட்டில் காணப்படும் எல்லா மரங்களை காட்டிலும் லீபனோனில் உள்ள கேதுரு மரம் உச்சிதமான மரமாக போற்றப் படுகிறது.

கேதுரு மரம் இன்றைய லெபனான் தேசத்தின் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது. இதன் உயரம் 100 அடி யாகவும் இதனுடைய அடிபகுதி 6 அடி அகலம் கொண்டதாகவும் உள்ளது.

கேதுரு மரமானது எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம்..இதனுடைய உயரம் 100 அடி உயரமாக இருந்தாலும், இதனுடைய அடிப்பகுதி ஒவ்வொரு வருடமும் படுத்துக் கொண்டே இருக்குமாம். இம்மரம் எல்லா காலங்களிலும் செழிப்பாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கேதுரு மரத்தின் ஆயுட்காலம் 100 வருடத்திலிருந்து 300 வருடங்கள் என்ன சொல்லப்படுகிறது. கேதுரு மரங்களில் நான்கு வகை மரங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மரங்கள் ஒரு வகை வாசனையான நல்ல நறுமணம் கொண்ட வாசனைகளை வீசுமாம்.இதனுடைய நறுமணத்தை 25 கி.மீட்டர் வரை உணரலாம் என்று சொல்லு கிறார்கள்.

இப்படிப்பட்ட கேதுரு மரங்களைக் கொண்டு தான் இஸ்ரவேலை ஆண்ட சாலமோன் மன்னன் தேவனுடைய ஆலயத்தையும் தாவீதின் அரண்மனையும் கட்டினான்.

காரணம் தேவனுடைய வீட்டைக் குறித்து தாவீதுக்குள் இருந்த பக்தி வைராக்கியம், சாலமோனுக்கு கூறியிருந்தான். எனவே விலையுயர்ந்த கேதுரு மரங்களைக் கொண்டு சாலமோன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டினான். அதோடு கேதுரு
மரங்களின் வாசனை ஆலயத்தின் மகிமையை வெளிப்படுத்தியது. மேலும் சாலமோன் பயன்படுத்திய ரதம் கேதுரு மரத்தால் செய்யப்பட்டவை (உன் 3:9). என் மணவாளியே உன் வஸ்திரங்களில் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாயிருக்கிறது. (உன் 4:11) என்று சாலமோன் கூறுகிறார்.

இந்த கேதுரு மரங்களின் வாசனை தைலத்தை பண்டைய எகிப்தியர்கள், கேதுரு மரத்திலிருந்து தயாரிக்க எண்ணெயை பண்டைய சுமேரியர்கள் வர்ணங்களுக்கும் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. பண்டைய காலத்து பெண்கள் இதனுடைய எண்ணெயை வகைகளை உங்களுடைய முகம் அழகுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு கேதுரு மரத்தின் அடியில் சுமார் 5000 பேர் வரை தங்கலாம். எனவே பரிசுத்த வேதாகமத்தில் நீதிமானின் செழிப்பு லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது.

நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப் போல் வளருவான். (சங். 92:1)


Share this page with friends