செழிப்பாக்கும் நதி !

வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எழு விதமான சுத்திகரிப்பு. 7 process of purification.

Share this page with friends

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனம், ஆசாரியர்கள், பலிபீடம், ஆலயம், பாளயம், அரண்மனை அறிவாளிகள், ராஜத்திகள், மற்றும் எருசலேம் குமாரத்திகள் சுத்திகரிப்பு முறைமைகளின் படி, இரத்தம், காணிக்கை, பலிகள், தண்ணீர், வாசனை திரவியம் போன்ற காரணிகளால் தங்களை தீட்டு, அசுத்தம், குறைப்பாடு மற்றும் பாவங்களில் இருந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும்.

ஆனால் புதிய ஏற்பாட்டில் நாமே தேவ ஆலயமாகவும் தேவன் தங்கும் இடமாகவும் இருப்பதால் கிறிஸ்துவே நமக்காக பலியாகி அவரது மரணத்தால் நமது ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தை சுத்திகரிப்பு செய்கின்றார். அவைகளை ஏழு வழிகளில் நாம் அறிந்து கொள்ளலாம்.

A. கிறிஸ்துவின் மூலம் வரும் சுத்திகரிப்பு.

கிறிஸ்துவின் சிலுவையின் மரணம், உயிர்த்தெளுதல், பாதாளத்தை வெற்றி கொண்ட சுவிசேஷத்தை கேட்டு அதை விசுவாசித்து , அந்த பரிசுத்தர் ஆகிய கர்த்தரிடம் நெருங்கி வரும் போது கிடைக்கும் முதல் சுத்திகரிப்பு.

B. பாவ அறிக்கை செய்யும் போது கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் சுத்திகரிப்பு.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்து, கிறிஸ்துவே பாவத்திற்கு பரிகாரி என்பதை ஏற்றுகொண்டு, நான் பாவி என்று ஒத்துக்கொண்டு, பாவங்களை அறிக்கை செய்து, சரி செய்ய வேண்டியவைகளை சரி செய்து, மனந்திரும்பி அவர் சிலுவையில் நமது பாவத்திற்காக சிந்தின இரத்தத்தை நம்பும் போது அதே கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்படுதல்.

C. தண்ணீர் முழுக்கினால் வரும் சுத்திகரிப்பு.

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பு பெற்றபின், அவரது கட்டளைக்கு கீழ்படிந்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெரும் போது நடைபெறும் புதிய பிறப்பாகிய சுத்திகரிப்பு.

D. பரிசுத்த ஆவியினால் வரும் சுத்திகரிப்பு

அப்படியே ஆவிக்குரிய சபை ஐக்கியத்தில், பரிசுத்தவான்கள் உறவில், திருவிருந்தில், ஜெபத்தில் உருதியாக தரித்து இருக்கும் போது காத்து இருக்கிறவர்கள் மேல் ஊற்றப்படும் பரிசுத்த ஆவியினால் வரும் சுத்திகரிப்பு.

E. கர்த்தரின் வசனத்தில் மூலம் வரும் சுத்திகரிப்பு

பரிசுத்த ஆவியை பெற்ற உடன், நமக்குள் இருக்கும் அபிசேசகம் நம்மை சகல சத்தியத்தில் போதித்து நடத்தும். அதை விசுவாசித்து அதின் படி கீழ்படிந்து நடந்தால், அந்த வார்த்தைகள் நம்மை புடமிட்டு சுத்திகரிக்கும். இது வசனத்தில் வரும் சுத்திகரிப்பு.

F. பாடுகள், அக்கினியின் வழியாக வரும் சுத்திகரிப்பு

அக்கினி நியாயதீர்ப்பையும் குறிக்கிறது. அதினால் உண்டாகும் தேவ பயத்தினாலும் ஒருவித சுத்திகரிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பாடுகள், சோதனையாகிய அக்கினி வழியாகவும் கர்த்தர் நம்மை வெள்ளியை, பொன்னை புடமிடுவது போல புடமிட்டு சுத்திகரிக்கிரார்.

G. கடைசியாக, தேவ மகிமையால் வரும் சுத்திகரிப்பு.

அப்படி கிறிஸ்துவில் வளரும் போது, வரும் பாடுகள், சோதனைகள், உபத்திரவங்களில் நிலைத்து நின்றால் முடிவில் அவரது பிரசன்னமாகிய, தேவ மகிமையால் நம்மை நிரப்பி, final touch ஆகிய மகிமையால் வரும் சுத்திகரிப்பை தந்து நம்மை மகிமையால் முடி சூட்டுவார்.

நாம் இதில் எந்த process இல் இருக்கிறோம் என்பதை கண்டுபிடித்து, நமது சுத்திகரிப்பு நிறைவேற, கிறிஸ்துவில் பூரணராக கடந்து போவோம். ஏனெனில் கர்த்தர் நல்லவர் மட்டுமல்ல, அவர் நம்மை புட்மிட்டு, சுத்திகரிக்கும் பரிசுத்தராக இருக்கிறார்.

செலின்.


Share this page with friends