கர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
2 கொரி : 1 : 20
…வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே எபி : 10 : 23
இந்தக் குறிப்பில் தேவன் அருளிய ஆறு வாக்குத்தத்தங்களைக் குறித்து சிந்திக்கலாம் வாக்குத்தத்தம் பண்ணினார் உண்மையுள்ளவராயிருக்கிறார். வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது. அதை விசுவாசிக்கிறவர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார்.
ஆறு வாக்குத்தத்தங்கள் இது ஒரு வாக்குத்தத்த செய்தி.
நீர் பூமியின் கடைசி பரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும் படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைப்பேன். ஏசாயா : 49 : 6
நான் உன்னை பாதுக்காப்பேன் ஏசாயா 49 : 9
என் மலைகளை யெல்லாம் வழிகளாக்குவேன்: என் பாதைகள் உயர்த்தப்படும். ஏசாயா : 49 : 11
இதோ ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன் ஏசாயா : 49 : 22
உன்னோடு வழக்காடுகிறவர்களோடே, நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்வேன் ஏசாயா : 49 : 25
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்ன கொடுப்பேன். ஏசாயா : 49 : 26.
கர்த்தர் இந்த வாக்குத்தத்தங்களையெல்லாம் கட்டாயம் நிறைவேற்றுவார். கர்த்தர் கொடுத்த இந்த வாக்குத்தத்தங் களைத் குறித்து சற்று தியானிக்கலாம்.
வேத பாடம்
ஏசாயா : 49 : 6 — 26
- நான் உன்னை ஒளியாக வைப்பேன்
ஏசா : 49 : 6 , 60 : 3.
லூக்கா : 2 : 30
யோவா : 5 : 35 - நான் உன்னை பாதுகாப்பேன்
ஏசா : 49 : 9
எபி : 13 : 5
எரே : 1 : 8 - நான் உன்னை உயர்த்துவேன்
ஏசாயா : 49 : 11,
ஏசாயா : 40 : 4 - என் கரத்தை உயர்த்தி உன்னை ஆசீர்வதிப்பேன்
ஏசாயா : 49 : 22
ஏசாயா : 59 : 19 - உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடுவேன்
ஏசா : 49 : 25.. - நான் உன் பிள்ளைகளை இரட்சித்து, உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக் கொடுப்பேன் ஏசா : 49 : 26.
இந்த ஆறு வாக்குத் தத்தங்களையும் தேவன் நமக்கு நிறைவேற்றிக் கொடுப்பார்.
ஆமென் !