தேவ பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய ஆறு நற்பண்புகள்

Share this page with friends

2 இராஜா. 6:1-7 வசனங்கள்

1) தேவனிடத்தில் அனுமதி பெற்று செல்லுங்கள்.
தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடத்தில் அனுமதி பெற்று சென்றனர்.

2) எங்கு சென்றாலும் தேவனை அழைத்து செல்லுங்கள்.
அனுமதி கிடைத்தாலும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவை அழைத்து சென்றார்கள். நாமும் தேவனை அழைத்து செல்ல வேண்டும்

3) தேவராஜ்யத்தை கட்ட இணைந்து செயல்பட வேண்டும்
தீர்க்தரிசிகளின் புத்திரர்கள் ஒவ்வொருவரும் மரங்களை வெட்டினரர்கள். அனைவரும் இணைந்து கூடாரத்தை கட்டினார்கள்

4) இரவலாக வாங்கப்பட்டதை அற்பமாய் எண்ணிவிடாதே
கோடாரி தண்ணீரில் விழுந்தது. அதை அற்பமாய் எண்ணி விட்டுவிடவில்லை. அதை விலையேறப்பெற்றதாக எண்ணினார்கள். தேவன் நமக்கு தந்த அனைத்தும் விலையேறப்பெற்றது. அவைகளை இலவசமாக தான் தேவன் தந்திருக்கிறார். அது கிருமையாக தந்தது. அதை அற்பமாக எண்ணிவிடாதே

5) பிரட்சனைக்கு பரிகாரத்தை தேவனிடம் கேளுங்கள்.
கோடாரி தண்ணீரில் விழுந்ததும் அதை மீட்க சக மனிதர்களிடத்தில் ஆலோசனை கேட்காமல் எலிசாவிடம் தேடி சென்றார்கள். இது போலவே உங்கள் பிரசனைகளுக்கு, தோல்விகளுக்கு, இழப்புகளுக்கு பரிகாரத்தை தேவனிடத்தில் தேடுங்கள்

6) தேவன் என்ன செய்ய சொல்லுகிறாரோ அதை மட்டும் செய்ய வேண்டும். கோடாரியை கையை நீட்டி எடுத்துக்கொள் என்று எலிசா சொன்னதும் அவன் கேள்வி கேட்காமல் அப்படியே செய்தான். நாமும் தேவன் சொல்லுகிறதை கேள்வி கேட்காமல் கீழ்படிய வேண்டும்.

இந்த செய்தியானது 30.08.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பூரண கிருபை ஏ.ஜி சபையில் தலைமை போதகர் Rev.பெமிலிட்டன் அவர்களால் ஆன்லைன் மூலமாக நேரலையில் வழங்கப்பட்டது.


Share this page with friends