நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.
நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.
A. தாவீதை தனது சகோதரன் எலியாப் துணிகரமானவனே நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு தேவ முகாந்திரத்தை தட்டி விடும் போது தாவீது வேறு ஒருவனிடம் திரும்பி என்று எழுத பட்டு இருக்கிறது. அந்த வேறு ஒருவனிடம் திரும்பியது தான் அவன் வாழ்க்கையே மாற்றி விட்டது. 1 சாமு 17: 30. அந்த பெயரிடப்படாத வேறு ஒருவன் மூலம் தான் அவன் சவுலிடம் அழைத்து போகப் பட்டு இருப்பான். நமது ஊழியத்தில் அந்த வேறு ஒருவன் மிகவும் அவசியம்.
- பவுலை குறித்து எல்லா அப்போஸ்தலர்கள் இன்னும் பயந்து இருக்கையில் ஒருவன் ஆறுதல் செய்கின்ற, பயத்தை மூட்டி கோள் மூட்டாத, உள்ளதை உள்ளபடி சொல்கிற, பவுலின் சுவிசேஷ தாகம், சுவிசேஷ தைரியம், பவுலை குறித்து பிறரிடம் நல்ல அபிப்பிராயம் மற்றும் நம்பிக்கை வர வைத்து நமது தரிசனத்தை வாஞ்சையை கலப்படம் இல்லாமல் சொன்ன பர்ணபாக்கள் இன்று நமக்கும் தேவை. இந்த பர்ணபாவினால் தான் பவுல் ஆபோஸ்தலரிடம் போக்கும் வரத்துமாக இருந்து பின்னர் சகோதரர்களால் சேசராவுக்கும் பின்னர் தர்சீசுக்கும் அனுப்பப்பட்டார். Act 9:27-30
- கொர்நெல்யு தனது வீட்டில் விசேஷித்த தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கனத்துக்கு உரியவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க பேதிருவை அழைத்து வந்த தேவ பக்தி உள்ள இரண்டு அதிகாரிகள் போன்று கனத்திர்க்கு உரியவர்களிடம் நம்மை அழைத்து செல்லும் தேவ பக்தி உள்ள அந்த பெயரிடப்படாத இரண்டு தேவ பக்திக்குரிய மனுஷர்கள் நமது ஊழியத்தில் தேவை. அதிகாரிகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்க பட வேண்டுமே! Act 10:7
D. பவுல் இன்னும் வீட்டு காவலில் ரோமாபுரி இல் வாடகை வீட்டில் இருந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் போது அவனை வாஞ்சையாக தேடி வந்த ஒனேசிப்போர் போன்ற நல்ல வீட்டாரும் நம்மை தேற்ற ஊழியத்தில் வேண்டும். அதுவும் மட்டுமன்றி எபேசுவில் பவுல் அதிகாரிகளிடம் மாட்டும் போதும் பற்பல உதவிகள் செய்து தோமேத்திருவின் கைக்கும் தப்புவிக்க பற்ப்பல உதவிகள் செய்த இந்த வீட்டரால் பவுல் அநேகம் தரம் தேற்றபட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். II Tim 1:16-18 Act 19.
கர்த்தர் இப்படிபட்ட நல்ல உள்ளங்களை நமது ஊழியத்தில் தந்து நடத்துவார். அவர் கிருபை என்றும் உள்ளது.
செலின்