தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

Share this page with friends

மும்பை, ஜனவரி 9,

தினத்தந்தி

மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார்.

இதனால் சிலுவைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இச்சம்பவம் பற்றி அறிந்த கத்தோலிக்க மக்கள் பெரும் வேதனையை தெரிவித்து இருந்தனர். குற்றவாளியை விரைவில் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன் காரணமாக தேவாலய நிர்வாகிகள் சம்பவம் குறித்து மாகிம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. நேற்று கலம்பொலிைய சேர்ந்த முகமது யாக்கூப் அன்சாரி (வயது22) என்பவரை கைது செய்தனர்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும் அவரிடம் கல்லறைகளில் இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this page with friends