உண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா
கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா என்னும் இவ்விருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள்.
எலியா தீர்க்கதரிசி, சுதந்திரப் பறவை!
மிகாயா தீர்க்கதரிசியோ, சிறைப் பறவை!
எலியா தீர்க்கதரிசிக்கு,
அப்பமும் இறைச்சியும் கிடைத்தது!
மிகாயா தீர்க்கதரிசிக்கோ,
இடுக்கத்தின் அப்பமும்,
இடுக்கத்தின் தண்ணீருமே கிடைத்தது!
எலியா தீர்க்கதரிசியை,
எவரும் தொடக்கூட முடியாது!
மிகாயா தீர்க்கதரிசியோ, அடிக்கப்பட்டான்!
எலியா தீர்க்கதரிசியோ,
ஆகாப்பை அலையவிட்டான்!
மிகாயா தீர்க்கதரிசியோ,
ஆகாப்பினால் அடைத்து வைக்கப்பட்டான்!
ஆனால் இவர்கள் இருவரும்
தேவனுடைய உத்தமமான தீர்க்கதரிசிகள்.
தேவனால் அனுப்பப்பட்டவர்கள்.
இவர்கள் இருவரின் வாயிலிருந்து
புறப்பட்ட தேவ வார்த்தையானது,
ஆகாப்பை அலறிட வைத்தது!
சில நேரங்களில் தேவனுடைய நடத்துதல் வித்தியாசமாக இருக்கலாம். சிலரை ராஜபாதையிலும், சிலரை எளிமையான பாதையிலும் தேவன் நடத்திடலாம் எனவே எளிமையான முறையில் தேவனுடைய ஊழியத்தை செய்வோரை , அற்பமாக எண்ணி, அவர்களை இழிவுபடுத்தி , நியாயம் தீர்த்து விட வேண்டாம்.
அனைவருக்கும் ஒரே பரலோக ராஜ்ஜியமே !
ஆமென் .