அலைபேசியின் சிணுங்கல் அதிகமாகிவிட்டது வித்யா’வின் பார்வை

தேசத்தில் மும்மாரி பொழிவது நின்றுவிட்டது
முள்மாரி பொழிவது பெருகிவிட்டது!
முகத்தில் புன்சிரிப்பு மறைந்துவிட்டது
முகக்கவசம் வந்தபின் முகமே மாறிவிட்டது!
நகைப்பும் நக்கலும் பெருகிவிட்டது
பகைப்பும் பரியாசமும் மலிந்துவிட்டது!
பேராசை மனிதனுக்கு பெருகிவிட்டது
போராசை தேசங்களுக்கு கூடிவிட்டது!
சபைகளில் பேரோசை குறைந்துவிட்டது
அலைபேசியின் சிணுங்கல் அதிகமாகிவிட்டது
இதற்காக முழங்காலில் நின்று
கதறவேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர் பங்களா, மதுரை -14