மத தீவிரவாதத்திற்கு கிறிஸ்தவ மார்க்கத்தின் சாட்டையடி!

Share this page with friends

இன்று மத பிரியர்கள் முழு உலகிலும் தங்கள் மதத்தில் பெயரில் கொலை, அடி, தடி, மிரட்டுதல், ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு, அடிமையாக்கும் பிரச்சாரம், தீண்டாமை, மூடபழக்கவழக்கங்கள், தவறான வழிபாடுகள், தவறான பிரச்சாரங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தி தங்களை அதிகாரத்தில், சமூகத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் தாங்கள் தான் பெரியவர்கள் என்று காட்டவும் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் மீது மேற்கொண்ட வழிகளில் அடக்குமுறைகளை கையாண்டு கட்டுபடுத்த பார்க்கிறார்கள்.

தாங்கள் நன்றாக இருக்க, தங்கள் வாழ்வில் உயர்வு வர, தாங்கள் வளர, தாங்கள் பாதுகாப்பாக இருக்க, தாங்கள் மேன்மையடைய தங்களது மதத்தின் அடிப்படையில் யாகங்கள், மந்திரங்கள், பூஜைகள், தொழுகைகள், சூனியங்கள் மற்றும் நரபலி கர்மங்கள் செய்து பிறரை பெலவீனபடுத்தி, பிறரது அறியாமையை பயன்படுத்தி, பிறரை காயப்படுத்தி, பிறரை நாசம் செய்து தங்களை மேலானவர்கள் என்று காட்டி கொள்ளும் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார்கள். ஒரு கூட்டத்தை, ஒரு ஜாதியை உயர்ந்தவர்கள் என்று காட்ட மற்றவர்களை தங்களுக்கு அடிமைகளை போல எல்லா இடத்திலும் நடத்தி அவர்களை விட தாங்கள் விசேஷமான மனிதர்கள் தேவ புத்திரர்கள் என்று காட்டி எல்லா அனியாயத்தயும் அறங்கேற்றுகிரர்கள்.

தங்களுக்கு சுய இராச்சியம் கட்ட, அந்த அடிப்படையில் ஒரு அரசியல் கொள்கை வைத்து, அதற்கு தங்கள் மத சாயம் பூசி, அதற்கு ஒரு கதையை கட்டி, அதற்கு ஒரு கற்பனை ஹீரோவை உண்டுபண்ணி அதை முன்வைத்து ஒரு பிரச்சாரம் செய்து தங்கள் திட்டத்தை நாசுக்காக பரப்பி ஒருவித தேசபக்தி என்கிற கடவுள் பக்தியை உருவாக்கி அதை கட்டமைத்து மக்களது அறியாமையை பயன்படுத்தி, அவர்களை பிறரை பகைக்கவும், அடிக்கவும், வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி, அக்கிரமிப்பு செய்யவும் நீண்ட கால குறுகிய கால திட்டமிட்டு, பயிற்சி கொடுத்து தங்கள் வன்மத்தை நிறைவேற்றி தங்கள் திட்டத்தை நடத்தியும் விடுகின்றனர்.

அவைகளை உறுதிபடுத்த பாரம்பரிய தடையங்களை அழித்து, வரலாற்று சரித்திரத்தை மாற்றி புதிய கதைகளை உருவாக்கி, புதிய கபட்டு தடயங்களை உருவாக்கி, உணமையை பொய் என்றும் பொய்யை உண்மையென்று பரப்புரை செய்து, கருத்துரிமையை நசுக்கி, அவதூறுகளை உண்டுபண்ணி, பொய் குற்றச்சாட்டுகளை உண்டுபண்ணி, சமூக விரோதி என்று பட்டம் சூட்டி, குரல்வளையை நசுக்கி, பேரம் பேசி எப்படி தங்கள் திட்டத்தை அமல் படுத்தவேண்டும் மோ அப்படியே சாதித்து விடுகின்றனர். மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை உருவாக்கி மனநிலையில் பாத்திக்க பட்டவர்கள் போல ஆக்கி விடுகின்றனர்.அதற்கென்றே சில அமைப்புகளை ஏற்படுத்தி, அதற்குரிய கைகூலிகளையும் ஏற்படுத்தி தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து விடுகின்றனர்.

இவ்விதமான வழிகளில் தான் பெருமான்மையான மதங்கள் செயல்படுகிறது. முஸ்லிம் நாடுகளில் மதத்தின் பெயரில் தீவிரவாத அமைப்புகள் துப்பாக்கி, குண்டுவைத்தல், தலைவெட்டுதல் போன்ற செயல்களை கச்சிதமாக பயிற்சி கொடுத்து நிறைவேற்றி விடுகின்றனர். இந்து நாடுகளில் பிறரை கொச்சை படுத்தும் வார்த்தைகளை கொண்டு பிறரது உணர்வுகளை தூண்டி, பின்னர் கலவரம், வன்முறை போராட்டம் என்று கூடி, தடி பட்டயங்கள், குஸ்திமுறை கற்று கொடுத்து பிறரை கொலை செய்து வழக்கு தொடுத்து, எல்லா துறைகளிலும் தங்கள் அடிப்படைவாதிகளை கொண்டு நீதி நியாயத்தை வளைத்து சிறுவயது முதல் தடி பயிற்சி, வாள் பயற்சி என்று மதத்தின் தவறான நம்பிக்கை அடிப்படையில் பிஞ்சு பிள்ளைகளில் இதயத்தில் நஞ்சு விதைத்து தங்கள் காரியங்களில் எந்த பின்னடைவும் இன்றி நடந்தேற பார்த்து கொள்கிறார்கள். புத்த மத நாடுகளிலும் இவைகளுக்கு இதே கொள்கைக்கு பஞ்சம் இல்லை. மதமற்ற கம்யூனிச நாடுகளிலும் மதத்தை பிரச்சாரம் செய்கின்றனர் என்று சொல்லி கடுமையான சட்டங்களால் கைது பண்ணி சித்ரவதை செய்து மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தி கொன்றும் விடுகின்றனர். மக்களை எப்பொழுதும் ஒருவித பரபரப்பு மற்றும் கலவர நிலையில் வைத்துக்கொள்ளும் காரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

இப்படிபட்ட செயல்களை செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்தும், உள்நாடுகளில் இருந்து பெரும் நிதி தொகைகளை வாங்கி, நீதி துறைகளில் தங்கள் துதி பாடும் நபர்களை நுழைத்து, அதிகாரங்களில் தங்கள் கைகளை ஓங்கவிட்டு, தங்கள் திட்டங்களை மிகவும் நேர்த்தியாக செய்து விடுகின்றனர்.தங்கள் எதிர்கால தலைமுறைகளை கூட நினைத்து பார்க்க முடியாத அறியாமை சில எத்தர்கள் உள்ளே நுழைந்து பணம் அதிகாரம் பதவி என்று கவிழ்ந்து கவிழ்த்து விடுகின்றனர்.

*இப்படி பிறரை கொன்று, தங்கள் மத கொள்கைகள், தங்கள் ஜாதி, தங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுகிறது போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் மேலோட்டமாக அன்பு சமாதானம் சகோதரத்துவம், பக்தி என்று எல்லாம் மாயத்துடன் பேசி பிறரை தங்கள்து சுயநலத்திற்காக அழிக்கும் தீவிரவாதத்தை தங்கள் அறமாகவும், தர்மமாகவும் கொண்டு *வேசம் போடும் தந்திரசாலிகள் வாழும் இவ்வுலகில் கிறிஸ்தவம் இன்றும் தாக்குப்பிடித்து முதலிடத்தில் ஒப்பற்ற ஒரு மார்க்கமாகவும் போகிறது என்றால் அதற்குள் ஒரு சத்தியம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள தான் இந்த பதிவு*.

உடனடியாக கிறிஸ்தவ மதத்தில் இப்படிபட்ட காரியம் இல்லையா என்றால் கிறிஸ்தவ மதத்தில் உண்டு ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இல்லை. ஆனாலும் இன்னும் பார்த்தால் கிறிஸ்தவ மதத்திலும் அப்படிப்பட்ட செயல்கள் மற்ற மதங்களை ஒப்பிட்டு பார்த்தால் சதவீத அளவில் புஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இப்படிபட்ட தீவிரவாத செயல்கள் நடந்தாலும் உடனடியாக கண்டனம் செய்து, சட்டத்தின் அடிப்படையில், நேர்மையாக வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து அவைகளை சரி செய்யும் நல்ல உள்ளங்கள், தைரியம் உள்ள நெஞ்சில் ஈரம் உள்ள எண்ணிக்கைக்கு அடங்காத உத்தமர்கள் உள்ள ஒரு மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவ மார்க்கம். மதத்திற்கும் மார்க்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உடனியாக சிலர் வாதம் என்ற பெயரில் விதண்டாவாதம் பேசுவார்கள் சிலுவை போர் என்று. அது இரு நாட்டினர்கிடையில் நடந்த யுத்தம் அதன் context வேறு ஆனால் இங்கு நடப்பது உள்நாட்டு சொந்த நாட்டு மக்களிடையே நடக்கும் சகிப்புத்தன்மையற்ற காரியங்கள் தான் மேல் குறிப்பிடப் பட்டவைகள்.

ஆனால் இந்த கிறிஸ்தவ மார்க்கம் மற்ற மதங்களை விட எப்படி விசேஷமானது?

A. கிறிஸ்தவ மார்க்கத்தில் சொல்லப்பட்ட தேவன் முவரில்(பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒன்றாக இருந்து, ஒன்றாக சிந்தித்து, ஒன்றாக இணைந்து, ஒன்றாக செயல் பட்டு கொண்டு இருக்கும் ஒன்றான மெய்தேவன். அந்த தேவனின் சாயலில் மூன்று நிலைகளில் (ஆவி, ஆத்துமா, சரீரம்) அதேநேரத்தில் மூன்றும் ஒன்றாக செயல்பட்டு இயங்கும் மனிதன் என்கிற அருமையான ஒரு சிருஸ்டிப்பின் சொந்தகாரர். அவரை போலவே அவர் சிருஸ்ட்டியும் இருக்க வேண்டும் என்று வார்த்தை, ஆவி மற்றும் மாம்ச நிலையில் இருக்க எந்த ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழவைக்கும் ஏகசக்கராதிபதியும், ஜீவன் கொடுக்கும் சர்வவல்லவரும், எங்கும் நம்மை வியாபிக்க வைக்கும் சர்வ வியாபியுமாக இருக்கிறார். அவரில் எள்ளளவு ஏற்றத்தாழ்வு இல்லை, பச்சபாதம் இல்லை. எல்லாரும் அவரிடத்தில் இருந்து வருகிறோம் அவரிடமே சேருகிறோம் என்கிற அருமையான வாழ்வியல் தத்துவத்தை கொடுத்த ஒற்றுமையின் அன்பின் சகோரத்துவ மார்க்கம் எனெனில் அவர் முவரில் ஒன்றாக இருக்கிறார். முழு அண்ட சராசரங்களின் சொந்தகாரர் இவரே! இவர் யாராலும் உருவாக்கப்படாமல் தாமே இயங்கி தமது மக்களையும் இயக்கி கொண்டு இருக்கும் ஆவியாக இருக்கும் தேவன். அவர் நமது சரீர கண்களுக்கு அப்பாற்பட்டு மனகண்களில் உணரப்பட்டு நல்லுளுழங்ககளில் குடி இருக்கும் அற்புதமானவர் அதிசமானவர்.

B. இரண்டாவது கிறிஸ்தவ மார்க்கத்தில் சொல்லப்பட்ட தேவன் அறம் சார்ந்தவரும், பரிசுத்தரும், நீதியுள்ளவரும், பாவத்தை கண்டிக்கும் நியாதிபதியாகவும், தனது சாயலில் உருவாக்கப்பட்ட இந்த மனித இனம் தன்னை போலவே வாழ்ந்து தன்னோடு நீடித்து வாழவேண்டும் என்று விரும்பி நீதி பிரமாணம் அடங்கிய நல்வார்தைகளை கொடுத்து அவைகளின் அடிப்படையில் வாழுங்கள் என்று காலம் காலமாக தனது அடியவர்களை அனுப்பி, பாவத்தை கண்டித்து நீதி செய்யவும் ஒழுக்கமான வாழ்வை வாழுங்கள் என்று கட்டளை கொடுத்தும், கண்டித்தும், கிருபை கொடுத்தும், இரக்கம் காட்டியும், அப்படியும் மனம் திருந்தி நேர்மையாக வாழாமல் வாழ்பவர்கள் தன்னை அறிந்தவர்கள் ஆயினும் அவர்களை தண்டித்து எச்சரித்தும் அழித்தும் வெளிபடுத்தி இருக்கிற அந்த நீதியை விரும்பி பரிசுத்தமாய் இருக்க விரும்பும் சர்வாதிகாரம் படைத்த தேவன். ( இந்த மார்க்கத்தில் இருந்து தான் முஸ்லிம் மதம் இந்து மதம் தங்கள் மூல வேதங்களை பெற்று உள்ளது. யூதர்கள் பாபிலோனிய, பெர்சியற்களின் காலத்தில் சிதறடிக்க பட்ட போது அவர்கள் அரசாங்க நிலைகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய போது அவர்களுக்கு பயந்து மதம் மாறியவர்கள் தான் இந்த பிராமணர்கள் அல்லது பிரமாணம் பெற்றவர்கள் அல்லது ஆபிரகாமியரகள் இவர்களிடம் இருந்து copy பெற்றது தான் இந்த வேதங்கள் அவைகளை வாசித்தால் போதும் இவர்கள் கண்கள் திறக்க படும்.)

C. மூன்றாவது அப்படியே இந்த மனிதர்களை அழித்து விடாதபடி அவர்களை மீட்டு இரச்சிப்பின் வழியை கொடுத்து அவர்களுக்கு மாதிரியாக வார்த்தையான தாமே மாம்சமாகி தமது குமாரன் சாயலில் இரச்சிப்பின் மார்க்கத்தை கொடுத்த மீட்பின் மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவ மார்க்கம். மனிதனின் கண்களால் காணமுடியாத ஆன்மாவின் கசடை மாற்ற விசுவாசம் என்கிற வழியை கற்று கொடுத்து, எவ்வளவு விசேஷம் என்று சொன்னாலும் நீ ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு மரித்து போவாய் என்பதை உணர்த்த மனிதனாக இரு என்று, அதே மனித கோலத்தில் வந்து, மனிதனை போல அதே நேரத்தில் பாவமற்றவராக வாழ்ந்து நன்மை செய்து, தனது தெய்வீகத்தை அற்புதங்கள், வல்லமையால் நீருபித்து, எல்லாரும் வாழவேண்டும் என்றால் அன்பு வேண்டும், சகிக்க வேண்டும், பறியாசங்கள், அவமானங்களை ஏற்று கொண்டு, பாடுகளை விட்டு விலகி ஓடகூடாது, வாழ்வில் உயரவேண்டும் எனில் பிறரை மன்னிக்க வேண்டும், பாடுகளை ஏற்று கொள்ள வேண்டும் என்று காயத்தை தழும்புகளாக மாற்றி பழிக்கு பழி வாங்க கூடாது என்று சத்தியத்தை வெளிபடுத்த தனது இரத்தம் சிந்தி அந்த இரத்தத்தினால் பாவமன்னிப்பு கொடுத்து மரணமே உன் ஜெயம் எங்கே என்று மரணத்தை மட்டுமல்ல எல்லா கர்ம வினைகளை சிலுவையில் ஆணி அடித்து வெற்றி சிறந்து, ஜெயித்து இன்றும் சர்வ வல்லவராக வீற்று இருக்கும் சகல அதிகாரம் பெற்ற எம்பெருமான் இயேசு கிறிஸ்துவை பெற்ற பெரும் மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவ மார்க்கம். அந்த நாமத்தில் இன்றும் நோய்கள் குணமாகிறது, மந்திரங்கள் இல்லாமல் போகிறது, தந்திரங்கள் ஒன்றும் இல்லாமல் ஆகிறது, பேய்கள் ஓடுகிறது. அவரை இருதயத்தில் விசுவாசித்து பாவங்களை அறிக்கை பண்ணி நாவினால் அவரே தெய்வம் என்று அறிக்கயிட்டால் இன்றும் அதே மகிமை வெளிப்படும். மனிதனின் கர்மவினை புண்ணியவினைகளால் நித்தியத்தை தீர்மானம் செய்தால் இன்னும் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும் என்பதை நன்கு அறிந்து தம்மை நம்பி விசுவாசிக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் வரும் நீதியை கொடுத்து மனிதனை இரச்சிக்கும் பாவத்திற்கு பரிகாரியான கிறிஸ்து ஒருவரே மாற்றமில்லாத பரிகாரி என்கிற உன்னத நிலையை கொண்ட மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.

D. கடைசியாக ஒரு நித்திய வாழ்வு உண்டு, இந்த பூமியில் நீ எந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தினாலும், சம்பாதித்தாலும், புகழ் சம்பாதித்தாலும், செழிப்பாக வாழ்ந்தாலும் இந்த உலகில் மரித்து போவாய், அது நிரந்தரம் இல்லை ஆனால் நிரந்தரமான ஒரு வாழ்வும் ஒரு ஆளுகையும் ஒரு ராஜியமும் வரப்போகிறது என்று சொல்லி அதற்கு ஏற்ற ஒரு வாழ்வை வாழ சுவிசேஷத்தை வைத்து போன நல்ல மார்க்கம். தலையெழுத்து, கர்மவினை மற்றும் ஜாதி படி தான் வாழவேண்டும் என்கிற கொள்கைகளை தகர்த்து, யாரும் உயர்ந்தவர் இல்லை எல்லாரும் பாவம் செய்து எல்லாரும் பாவிகளே என்கிற சத்தியத்தை அறிவித்து நித்திய வாழ்வின் மேலான நம்பிக்கையை கொடுக்கும் ஒரே ஒப்பற்ற மார்க்கம் தான் இந்த கிறிஸ்து மார்க்கம். இந்த மார்க்கம் மனித வாழ்வை மாற்றும் மனதை மாற்றும், மனித சிந்தையை பரிசுத்தமாக மாற்றும் மற்றும் சமூகத்தை மாற்றும் வல்லமை உள்ள இந்த சுவிசேஷத்தை கொடுக்கிறது. இதற்கு மதம் இல்லாததால் மதம் மாற்றும் அவசியமில்லை. அதினால் தான் இந்த சுவிசேஷம் எங்கு எல்லாம் போனதோ அங்கு எல்லாம் அறியாமை இருளை விலக்கி, இவ்வுலக வாழ்வை மறந்து சேவை மனப்பான்மை பெருக்கி, பிறரை நேசித்து, சமூக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மனித சுபாவ மாற்றம், நல்வாழ்வு, சகிப்புதன்மையை கொடுத்து உலகம் தராத சமாதான வாழ்வை கொடுத்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த மார்க்கம் எனவே தான் தங்கள் செல்வத்தை உண்மையாக சம்பாதித்த செல்வத்தை திரட்டி மக்களை அழிக்கும் தீவிரவாதம் செய்வதில்லை மாறாக சமூகத்தின் வளர்ச்சி, தரம், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றை மேம்படுத்துகிறது தொண்டு மற்றும் சேவை செய்கிறார்கள். அதையும் தடுத்து விடுகிறார்கள் ஆனால் தீவிரவாதத்திற்கு நிதி கொடுத்து ஊக்குவிக்கிறது மதம் பிடித்த மதங்கள். ஆனால் எங்கள் கிறிஸ்தவ மார்க்கம் அன்பின் அடிப்படையில் கிறிஸ்தவத்தில் வளர்ந்த் நாடுகள் அதினால் தான் பிற மதத்தவரையும் தங்கள் நாட்டில் ஏற்று கொண்டு அவர்களுக்கும் அதே சம உரிமையையும் கொடுத்து, மனிதனாக மரியாதை கொடுத்து இன்றும் அசையாமல் உயர்ந்து நிற்கிறது. காரணம் இந்த கிறிஸ்தவத்தில் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்கிற நல்ல அறிவும் நம்பிக்கையும் நிரம்பி இருக்கிறது. மற்ற மதத்தினர் போல கீழ்த்தரமான பிறவி மற்றும் அறம் தவறிய நித்திய வாழ்வு இந்த கிறிஸ்தவ நித்தியத்தில் இல்லை. அப்படிப்பட்ட பரிசுத்த சந்தோசம் நிறைந்த நித்திய வாழ்வை பெற விரும்பும் ஒவ்வொரு நல்ல கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் நடக்கும் தீவிரவாதம் தீண்டாமை கொலைவெறி தாக்குதல்கள் போன்றவைகளை குறித்து பயப்பட மாட்டார்கள். எனெனில் அவர்கள் வாழ்வு இந்த உலகோடு முடிவதில்லை மரணத்திற்கு பின்னர் தான் ஆரம்பம் ஆகிறது.

எந்த மதத்தில் தேவன் ஒருவரே அவருடைய சாயல் தான் மனிதன், அவன் நல்ல வழிகள் ஆலோசனைகளைப் கொண்டு வாழவேண்டும், அவனுக்கு மாதிரியான இரச்சகர் வேண்டும் அவன் வாழ்விற்கு பின்னர் ஒரு நல்ல நித்திய வாழ்வு உண்டு என்று சொல்ல தவருகிறதோ அது மதம் பிடித்த யானைகளின் கூடாரம். ஆனால் எந்த மார்க்கம் எல்லாரையும் ஒன்றாக நேசித்து அவர்களுக்கு வழிகாட்டி, எல்லாரையும் சமமாக பாவித்து நல்ல எதிர்காலத்தையும் வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கி மனிதனுக்கு மரணத்திற்கு பின்னரும் ஒரு நல் வாழ்வை கொடுக்கிறதோ அது தான் சத்திய மார்க்கம் நித்திய மார்க்கம் அது தான் எங்கள் கிறிஸ்தவ மார்க்கம்.

எனவே மனிதன் எதை விதைக்கிரானோ அதையே அறுப்பான் என்பதை அறிந்த நாம் நமது தலைமுறைகள் நல்ல ஒரு வாழ்வை இந்த இந்தியாவில் பெற்று கொள்ள நல்ல சூழலை உருவாக்குவோம். அது கிறிஸ்துவில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து அவர் வழி வருவோம். அவரே வழியும் சத்தியமும், ஜீவனும், உலகிற்கு வெளிச்சமுமாக இருக்கிறார். அவரில் நடக்கிறவன் பயப்பட மாட்டான். ஏனெனில் அவரில் இருள் இல்லை, இடரல் இல்லை. அந்த இயேசுவின் கிருபை, அன்பு, சமாதானம், பரிசுத்தம் நம்மை நிறப்புவதாக! Amen

Selin


Share this page with friends