கர்த்தருடைய வார்த்தை

Share this page with friends

கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4)

கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்
தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த தேவ மனிதர்கள் என்பதையும் குறித்து
சிந்திக்கலாம்

  1. ஆபிரகாம் (ஆதி 15 : 1)

இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு தரிசனத்திலே உண்டாகி, அவர் நீ பயப்படாதே, நான் உனக்கு கேட்கும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

  1. ஈசாக்கு (ஆதி 26 : 24)

அன்று இராத்திரியிலே கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிராகமுடைய தேவன் பயப்படாதே, நான் உன்னோடு கூட இருந்து என் ஊழியக்கார னாகிய ஆபிரகாம் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன்.

  1. யாக்கோபு (ஆதி 28 : 15)

நான் உன்னோடு கூட இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னை காத்து இந்த தேசத்திற்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன்: நான் உனக்கு சொன்னதைச் செய்யுமளவும் உன்னை கைவிடுகிறதில்லை என்றார்.

  1. யோசுவா (யோசுவா 1 : 5)

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக
எதிர்த்து நிற்பதில்லை நான் மோசேயோட இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.

  1. மோசஸ் (யாத் 33 : 14)

அதற்கு அவர் என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்

கர்த்தருடைய வார்த்தை ஆபிராம் , ஈசாக்கு, யாக்கோபு, யோசுவா மற்றும் மோசே இவர்களுக்கு தமது வார்த்தையை தந்து அந்த நல்ல வார்த்தைகளை அவர்களது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நிறைவேற்றினார். அப்படியே நமக்கும் தேவன் தம்முடைய வார்த்தையை தந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பார். இவர்களது தேவன் நம்முடைய தேவன்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு
கேள்வி: சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது?
பரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்
நம்மை பற்றிய சில உளவியல் உண்மைகள்
வியாதியினால் உண்டாகும் தீமைகள்
முத்திரிக்கப்பட்டவர்கள்
முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி 78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.
மகத்துவங்களை எழுதி வரலாற்றுச் சாதனை!
ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.

Share this page with friends