உலக பிரசித்தி பெற்ற தீர்க்கதரிசி டி.பி ஜோஸ்வா கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ஆச்சரியமூட்டும் அவரது வாழ்கை குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Share this page with friends

Nigerian pastor – Prophet TB Joshua

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரும் தென் ஆப்பிரிக்காவில் எழுப்புதல் வேட்கையை பற்றி எரிய செய்தவருமாகிய தீர்க்கதரிசி டி. பி ஜோஸ்வா அவர்கள் 5, ஜூன் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

ஆப்பிரிக்க தேசத்தில் 12, ஜூன் 1963 அன்று பிறந்த இவருக்கு வயது 58. தனது பிறந்த நாளுக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஏற்பட்ட இவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தனது பிறந்த நாளுக்கு முன்னே தான் மரித்துவிடுவேன் என சில மாதங்களுக்கு முன் தீர்க்கதரிசனம் அவர் தீர்க்கதரிசனம் கூறி தன்னை நித்திய வீட்டிற்கு ஆயத்தப்படுத்தியுள்ளார்.

நைஜீரியா என்னும் மாகாணத்தில் மிக சிறிய அளவில் ஒரு சிலரை கொண்டு இவர் ஆரம்பித்த ஜெபகூடுகை இன்று Synagogue Church Of All Nation என்ற பெயரில் மாபெரும் தேவாலயமாக மாறியுள்ளது. டி.பி ஜோஸ்வா அவர்கள் இந்த திருச்சபைபின் தலைமை போதகராக பணியாற்றினார்.

தேவனின் கிரிகைகளை நேரடியாக பார்க்க வேண்டுமா? நைஜீரியாவிற்கு செல்லுங்கள் என்று கூறும் அளவிற்கு தேவன் அந்த மாகாணத்தில் இவரை கொண்டு அற்புதங்களை செய்துள்ளார். பல மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பியுள்ளார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட வியாதிகள் கூட இவரது கூட்டங்களில் நொடிப்பொழுதில் சுகம் பெற்று சாட்சி கூறியுள்ளனர். இவரது எல்லைக்குள்ளே பிசாசின் கிரிகைகள் அலறிக்கொண்டு வெளியேறும் அளவில் தேவ பிரசன்னம் வெளிப்படுமாம்.

இம்மாணுவேல் தொலைக்காட்சி உட்பட சமூக ஊடகங்கள் வாயிலாக இவரது பிரசங்கங்கள் ஔிபரப்பாகி வந்தது. லட்சக்கணக்காணோர் இவரது பிரசங்கங்களினால் நல்வாழ்வு பெற்று இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவரது இழப்பு கிறிஸ்தவ சமூகத்திற்கு மாபெரும் இழப்பு எனினும், அவர் தன் வாழ்வில் தேவன் நியமித்த கிரிகைகளை செய்து முடித்து, தன் வீட்டிற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.

இப்படிப்பட்ட சரித்திர புகழ்வாய்ந்த தேவ மனிதர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்ற உணர்வோடும் அவரை போன்ற ஆயிரம் தேவ ஊழியர்கள் இன்னமும் எழும்ப வேண்டும் என்ற ஜெபத்துடனும் நம் வாழ்க்கை பயணத்தை தொடருவோம்.


PROPHET TB JOSHUA – JUNE 12th 1963 to JUNE 5th 2021

“Surely the Sovereign LORD does nothing without revealing his plan to his servants the prophets.” – Amos 3:7

On Saturday 5th June 2021, Prophet TB Joshua spoke during the Emmanuel TV Partners Meeting: “Time for everything – time to come here for prayer and time to return home after the service.”

God has taken His servant Prophet TB Joshua home – as it should be by divine will. His last moments on earth were spent in the service of God. This is what he was born for, lived for and died for.

As Prophet TB Joshua says, “The greatest way to use life is to spend it on something that will outlive it”.

Prophet TB Joshua leaves a legacy of service and sacrifice to God’s Kingdom that is living for generations yet unborn.

The Synagogue, Church Of All Nations and Emmanuel TV Family appreciate your love, prayers and concern at this time and request a time of privacy for the family.

Here are Prophet TB Joshua’s last words: “Watch and pray.”

One life for Christ is all we have; one life for Christ is so dear.


Share this page with friends