We need to ask questions before making decisions

தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

Share this page with friends

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள்.

தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் அவலம் தாய்லாந்திலும் தொடர்கிறது. பாங்காக்குக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்கள் தொண்டு நிறுவனங்கள் தரும் உணவை நம்பியே வாழ்கிறார்கள்.

தஞ்சக்கோரிக்கையாரிக்கையாளர்களை கையாள்வதற்கான ஐநா சர்வதேச ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்திடவில்லை. எனவே முறையான விசா இல்லாத அனைவருமே கிரிமினல்கள் என்பது தாய்லாந்து அதிகாரிகளின் பார்வை.

ஆனாலும் இவர்களுக்கு உதவ ஐநாவின் அகதிகள் அமைப்புக்கு தாய்லாந்தில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அது இவர்களின் அகதிக் கோரிக்கைகளை பரிசீலித்து வேறு நாடுகளுக்கு அனுப்ப முயல்கிறது. அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கிறது. இதனால் பொறுமையிழந்த தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் சோதனைகள் நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக்கூறி பல பாகிஸ்தானிய பெண்கள் குழந்தைகளை கைது செய்து அடைத்துள்ளனர்.

பாங்காக்கின் சட்டவிரோத குடியேறிகளை அடைத்துவைக்கும் மையத்துக்குள் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதியில்லை. தொண்டு நிறுவன பணியாளர்கள் போல பிபிசி உள்ளே சென்றது.

அங்கிருக்கும் 200 பேரில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானிய பெண்கள் மற்றும் குழந்தைகள். தங்களை விடுவிக்கக் கோரும் குரல்களின் ஓலம் அங்கே ஓங்கி ஒலித்தது. ஆனால் தொண்டு நிறுவன ஊழியர்களால் தர முடிந்தது உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே.

ஆண்களிடமிருந்து தனியாக பிரிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் நெரிசல்மிக்க வேறு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். தங்களால் முடிந்தவரை இவர்களை நல்லவிதமாக பார்த்துக்கொள்வதாக தாய்லாந்து அரசு கூறுகிறது. அபராதத்தொகையை தரமுடியாதவர்கள் தாய்லாந்த் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அபராதத்தை தொண்டுநிறுவனங்கள் கட்டினால் அவர்கள் விடுதலை ஆவார்கள்.

11500 பாகிஸ்தானியர்களின் தஞ்சக்கோரிக்கைகளைக் கையாள வெறும் எட்டு ஐநா அகதிப்பணியாளர்களே இருக்கிறார்கள். இதுவும் தாமதத்துக்கு காரணம் என்று அந்நிறுவனமும் ஒப்புக்கொள்கிறது. இந்த பின்னணியில் சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்வதைத்தவிர தனக்கு வேறுவழியில்லை என்கிறது தாய்லாந்து அரசு.

26 பிப்ரவரி 2016

நன்றி: BBC News


Share this page with friends