கிறிஸ்தவர்களுக்கு எதிராக வரும் இந்த ரைடுகளில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்!

Share this page with friends

கிறிஸ்தவர்களுக்கு எதிராக வரும் இந்த ரைடுகளில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்!

1) நாம் இவற்றில் பரிதாபம் படுவதில் எந்த அளவு உதவக்கூடும் என்று நம்மால் சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக விமர்சனம் செய்வதும் எந்த அளவு நன்மை பயக்கும் என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாது. எனவே இந்த வேளையில் அமைதி காப்பது மிகவும் நல்லது ஏனெனில் பிறரை நாம் குற்றவாளிகளாக தீர்க்க நாம் அழைக்க படவில்லை. ஆனால் அதே நேரத்தில் பாடம் கற்று கொள்ள வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

2) இதில் நியாயம் நிச்சயம் வெளிப்படும். தேவ செயல் நிச்சயம் வெளிப்படும். அரசியல் செய்து கிறிஸ்தவர்களை மட்டம் தட்ட இதை அரசியல் ரீதியாக செய்து இருப்பார்கள் என்றால் நிச்சயம் கர்த்தர் பரிகாரம் செய்வார். அதே நேரத்தில் இந்த ரெய்டு செய்ய சரியான முகாந்திரம் இருந்தால் அவற்றை சரி செய்யவும் கர்த்தர் இன்னும் தருணம் கொடுக்க முடியும் ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து இருக்க செய்வார். தங்கள் குறைகளை சரி செய்ய தருணம் நிச்சயம் கர்த்தர் கொடுப்பார். சந்தேகமில்லை. பண விஷயங்களில் கணக்கு வழக்குகள் சரியாக நிர்வகிக்க பட வேண்டும். அப்படி நிர்வகிக்கும் போது கால்புணர்ச்சி கொண்டு நமது ஊழியங்களி ல் யார் கைவைத்தாலும் அதை கர்த்தர் கவனித்து கொண்டு பரிகாரம் செய்வார் என்பதில் சந்தேகமும் வேண்டாம்.

3) ஆவிக்குரிய நாம் கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் போன்ற தொழில் மற்றும் சமுதாய தொண்டு நடத்தும் போது அவற்றை அரசாங்க முறைப்படி நடத்தி, அவற்றை ஆவிக்குரிய கரியங்களோடு சம்மந்தம் செயாதபடி அவற்றை தொழில் முனைவோர் செய்வது போல செய்ய வேண்டும்.

4) மதம் அல்லது ஊழியம் சார்ந்த காரியங்கள் மெய்யாகவே தனித்து , ஆவிக்குரிய காரியங்களுக்காக மட்டும் அவற்றை மையமாக மட்டும் கொண்டு நடத்த வேண்டும். ஊழியம் மூலம் வரும் பணம் ஊழிய காரியங்கள், சுவிசேஷ காரியங்கள், சபை வளர்ச்சி காரியங்கள், மிஷனரி காரியங்கள் போன்ற ஆவிக்குரிய காரியங்களுக்கு மட்டும் பயன்பட வேண்டும். கர்த்தருடைய கட்டளையே நமக்கு பிரதானமாக இருக்க வேண்டும். இந்த சமுதாய நன்மை பயக்கும் காரியங்கள் எல்லாம் ஆவிக்குரிய வரங்களின் அடிப்படையில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் நடக்கும் விடுதலையின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே அன்றி தொழில் மற்றும் சமுதாய தொண்டின் நிலைகளில் ஏற்படாதவாறு இருக்க வேண்டும்.

5) ஊழியம் செய்கின்ற நாம் ஒருபோதும் அரசியல் ரீதியாக செயல்படாமல் இருப்பது மிகவும் நல்லது. அரசியல் கணிப்புகள், அரசியல் ஆதாய பேச்சுகள், அரசியல் வாதிகளை சந்தித்து அவர்களை சந்தித்து favour வாங்க நினைத்தல், அரசியல் வாதிகளுக்கு அதரவாக பேசி தயவு பெற நினைத்தல், இழிவான ஆதாயங்களுக்கு அவர்கள் பின்பே போய் தங்கள் உடமைகளை பாதுகாக்க அவர்களை ஆதரித்து செயல்படும் காரியங்களை செய்யாமல் இருத்தல் வேண்டும்.

6) அரசியல் வாதிகளை சந்தித்து, சுவிசேஷம் அறிவிப்பதும், அவர்கள் பாவங்களை சுட்டி காட்டி ஜீவனையும் பணயம் வைத்து அவர்கள் மனம் திரும்ப செய்யும் பிரதான வேலையை செய்யும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஊழியம் செய்யும் நிலை வரவேண்டும். மனிதனை திருப்தி படுத்தி, மனித கனம் வேண்டும் என்கிற நிலையில் வாழும் வாழ்வை வெறுத்து கிறிஸ்துவின் வாழ்வை வாழ வேண்டும்.

7) கடைசியாக நமது ஊழிய நோக்கங்கள் பரிசோதிக்க பட வேண்டும். கர்த்தருடைய பிரதான நோக்கத்தை நாம் நிறைவேற்றாமல், சுவிசேஷம் அறிவிக்க, ஊழியம் செய்ய சமரசம் செய்து இப்படிபட்ட தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி அதின் மூலம் சுவிசேஷம் அறிவிப்போம் என்கிற மாயவலையில் இருந்து விடுபட்டு அப்போஸ்தலர் நாட்களில் எப்படி அப்பட்டமாக சுவிசேஷம் அறிவித்து, சபை உருவாக்கினார்களோ அப்படியே நமது ஊழியத்தை நிறைவேற்ற இதை ஒரு பாடமாக கற்று கொள்ள வேண்டும்.

கர்த்தர் கிருபை கூட இருப்பதாக.

செலின்


Share this page with friends