சொன்னார்கள்… சொல்லுகிறேன்! வித்யா’வின் விண் பார்வை!

Share this page with friends

புத்தகங்களே
கனவுகளை
வளர்க்கும்

கனவுகள்
எண்ணங்களை
வளர்க்கும்

எண்ணங்கள்
செயல்களை
உருவாக்கும்

சொன்னவர்,

முன்னாள்
ஜனாதிபதி
டாக்டர்
A.P.J. அப்துல் கலாம் அவர்கள் |
(Dr. A.P.J. Abdul Kalam)

நான் என்ன சொல்லுகிறேன்;

உலகம் போற்றும் விஞ்ஞானி
சொன்னது உண்மைதான்

அதோடு
நான் ஒன்றைச்
சொல்லுகிறேன்;

புத்தகங்களுக்கெல்லாம்
புத்தகம்
என்றழைக்கப்படும்
வேதப்புத்தகம்

வாசிப்போரின்
விசுவாசத்தை
வளர்க்கும்

அந்த விசுவாசம்
உலகையே ஜெயிக்க
வைக்கும்

அந்த விசுவாசத்தால்
சிங்கக் கெபிக்குள்ளும்
ஜெபிக்கலாம்
(தானியேல் 6:16)

அக்கினிச் சூளைக்குள்ளும்
நடக்கலாம்

ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட
நெருப்புத்தழலில்
தேவ குமாரனோடு
உலாவிக்கொண்டிருக்கலாம்
(தானியேல் 3:25)

சிங்கங்களின்
வாய்களை

அடைக்கலாம்

ராஜ்யங்களை
ஜெயிக்கலாம்
(எபிரெயர் 11:33)

ராஜபாதையில்
நடக்கலாம்
என்று
சொல்லுகிறேன்.

கர்த்தரின் எழுத்தாணி
நல்லாசான்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

20.04.2023
91-77080 73718


Share this page with friends