good Ideas for Pastor Church during Lockdown

2021 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்

Share this page with friends

2021 ஆம் ஆண்டிலிருந்து “தீர்க்கதரிசனம்” என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்….!!!

செழிப்பான ஆண்டு உங்களுக்கு பொன்னும் பொருளும் கொழிக்கும் ஆண்டு என்று 2020 இல் சொன்னவர்கள் தங்களுக்கு குறைந்த பட்ச மனசாட்சி இருந்தால் இந்த ஆண்டோடு தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லும் பம்மாத்து வேலைகளை விட்டு விடுங்கள்.

அதே போல ஒவ்வொரு வருசமும் எப்படி இருக்க போகுது உலகத்தில் என்ன நடக்க போகுது என்று அதீத ஆர்வத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி குறி கேட்பதை போல கேட்க சில நபர்களை தேடி ஓடுபவர்கள் இந்த ஆண்டில் இருந்தாவது கொஞ்சம் திருந்தினால் நல்லது.

நீங்கல்லாம் இப்படி குறி கேட்க ஓடுவதாலேயே அவர்களும் வாய்க்கு வந்ததை எல்லாம் ஆண்டவர் சொன்னதாக சொல்லி ஆண்டவரின் நாமத்துக்கு இழிவை தேடி தருகிறார்கள்.

ஊர்ல நாட்டுல எதுவும் நடக்கட்டும். 2021 ஆம் வருடம் எந்த அழிவும், காற்றும், புயலும், நில நடுக்கமும் அல்லது நன்மையும் கூட நடக்கட்டும். அதை எல்லாம் முன் கூட்டி அறிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தேவனின் அனுமதி இன்றி இந்த உலகில் எதுவும் நடக்கப் போவதில்லை.

உங்கள் தலை மயிர் எல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது என்னும் அளவுக்கு உங்களை குறித்து அவரது வார்த்தையும் கரிசனமும் இருக்கிறது. நம் அனைவருடைய பாதுகாப்பும் தேவ கரத்திலேயே உள்ளது.

ரொம்ப குறிப்பா, வரும் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வேறு வருகிறது. தேர்தல் வந்துட்டா நம்ம ஆட்கள் இன்னும் குஜால் ஆகி விடுவார்கள். மோடி வரமாட்டார் என்பார்கள். அப்புறமா மோடி வந்த பிறகு நீங்கள் சரியா ஜெபிக்கல அல்லது மோடி வருவதன் மூலம் இந்துத்வா ஆட்களின் வன்முறைகளினால் தான் அனேகர் கிறிஸ்துவை ஏற்க ஆண்டவர் சித்தம் என்று கதைகளை மாற்றி மாற்றி பேசுவது உங்களுக்கு ரொம்ப சர்வ சாதாரணமா இருக்கலாம். ஏன், அமெரிக்காவில், டிரம்ப் தான் மீண்டும் வெற்றி பெறுவார் என்று தீர்க்க தரிசனம் சொன்னீர்கள். என்ன ஆச்சு?

இப்படி நீங்கள் கூறும் கள்ள தீர்க்க தரிசனத்தை உலகம் ரொம்ப இழிவாகவே பார்க்கும். அதனால் உங்களுக்கு அவப்பெயர் வருவது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. தேவ நாமம் தூஷிக்க படும் என்பது குறித்தே எங்கள் கவலை. தயவு செய்து ஆட்சி மாற்றம் வருது திமுக ஆட்சி அமைக்கும், சீமான் ஆட்சி அமைப்பார் போன்று எதையும் சொல்லி விடாதீர்கள்..???

கூடவே நான் அங்கே பார்த்த போது இயேசு சோகமாக உட்கார்ந்திருந்தார். அவர் பார்வையும் கவலையும் தமிழகத்தை பார்த்து இருந்ததுன்னு தயவு செய்து வாய்களை திறந்துடாதீங்க….!!!

இந்த ஆண்டு (2020) ஆசிர்வாதமாய் செழிப்பாய் வேலை வாய்ப்பு எல்லாம் பெருகி அமோகமா இருப்பதாக தீர்க்க தரிசனம் சொன்னீர்களே.. ஆனால் கொரானா வந்து எல்லாம் நேர்மாறா நடந்திருக்கேன்னு அந்த பிரபலங்களிடம் போய் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா.. பிரதர் இந்த ஆண்டில் கொரானா மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் எத்தனையோ பேர் மரித்து போனார்கள்.

தேவன் உங்களை உயிரோடு வைத்திருப்பது எவ்ளோ பெரிய ஆசிர்வாதம் என்று உங்கள் வாயடைக்க பார்ப்பார்கள். உள்ள படியே தேவன் இந்த ஆண்டில் இந்த கொடூர கொள்ளை நோய்க்கு மத்தியில் உயிரோடு வைத்திருப்பது மிகப் பெரிய கிருபை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அது கொள்ளை நோயின் போது இந்த ஆண்டு மாத்திரம் அல்ல. அன்றாடம் நாம் பிழைத்திருப்பதே அவரது சுத்த கிருபை…!!!

நாம் கேட்கும் கேள்வி என்பது, நீங்க ஆசிர்வாதம் செழிப்புன்னு சொன்ன விசயங்களுக்கு பதில் என்ன என்பது தான்….???
ஆனால் அதற்கு மட்டும் பதில் மட்டும் சொல்லவே மாட்டார்கள்.
காரணம் பதில் கிடையாது.

ஆனால் இங்கே பெரும்பான்மை தீர்க்கதரிசனம் என்பது மே மாதம் சென்னையில் கடும் வெயில் அடிக்கும், நவம்பர் மாதம் மழை பெய்யும், ஆடி மாதம் காத்தடிக்கும், என்ற ரகத்தில் ஆனவை. ஆகவே அன்பு மக்களே இந்த ஆண்டு கொரானா பாடத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு நாம் மாறுவோம்.

நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனம் ஒன்றே. அது “இயேசு கிறிஸ்து இவ்வுலகை நியாயம் தீர்க்க விரைவில் வருகிறார்” என்பதே. அவர் வருகைக்கு ஆயத்தம் ஆவோம் நித்திய இராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வோம். ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்…!!!

WhatsApp Message


Share this page with friends