வேதம் வாசிக்க தடையாக காணப்படும் காரியங்கள்

Share this page with friends

1) வீணரோடு உட்காரக் கூடாது (சங் 26:4). வீணர் = வீணாக நேரத்தை போக்குபவர்கள். இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்களோடு உட்கார்ந்து வீண் கதை, ஊர் கதை பேசி நேரத்தை போக்குகின்றனர். தேவ ஐனமே 10 நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தில் வேதம் வாசிக்க வேண்டும் .

2) துன்மார்க்கரோடு உட்கார கூடாது (சங் 26-5) துன்மார்க்கர் = உலக ஐனங்கள். உலக ஐனங்கள் இடம் பேசும் போது 1 அல்லது 2 வார்த்தை பேசி வீட்டு இடத்தை காலி செய்ய வேண்டும். பாவிகளின் வழியில் நில்லாமலும் (சங் 1:1)

3) ஊர் சுற்றுதல்: இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் shopping போகிறோம் ( mall) என்று சொல்லி ஊர் சுற்றுவதை பார்க்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது தவறு அல்ல. அரை மணி நேரம் உட்கார்ந்து வேதம் வாசிக்க முடியாது. ஆனால் மணிக்கணக்காய் ஊர் சுற்றுவார்கள்.

4) களியாட்டுகள்: இன்றைக்கு அநேக விசுவாசிகள், வயதானவர்கள், ஊழியர்கள் கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கு அடிமையாகி
இருப்பதை காணலாம். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பாஸ்டர் தனது சபையில் special meeting க்கு என்னை அழைத்திருந்தார். செய்தி கொடுக்கும் ஊழியக்காரர் அருகில் அமர்ந்திருந்தேன். அவர் வல்லமையாக பிரசங்கம் பண்ணினார். கன்று குட்டியை போல அங்கும் இங்கும் ஓடி ஆடி பிரசங்கம் பண்ணினார். கூட்டம் முடிந்தவுடன் தனது செல்போனை எடுத்து தனது மகனுக்கு போன் செய்து india score என்ன என்று கேட்டார். கிரிக்கெட் பிசாசின் கண்ணி. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள், விசுவாசிகள் இதில் சிக்கி உள்ளார்கள் கிரிக்கெட் பார்ப்பதால் 8 மணி நேரம் வீண. அந்த 8 மணி நேரத்தை ஜெபிக்க, வேதம் வாசிக்க, தியானிக்க, கர்த்தரை துதிக்க செலவு செய்யலாமே. அதன் மூலம் அதிகமான தேவ ஆசிர்வாத்த்தை பெறலாமே.

நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் காலத்தை பிரயோஜன படுத்தி கொள்ளுங்கள் – (எபேசி 5:16). (1 யோ 2:15-17) கண்களின் இச்சை என்று படிக்கிறோம். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் – (கலா 5:24) மனசும் மாம்சமும் விரும்புகிறதை செய்ய கூடாது – (எபேசி 2:3) கிரிக்கெட் களியாட்டுகளில் ஓன்று – (கலா 5:21)( ரோ 13:13). மோசே விசுவாசத்தில் வல்லவன் (பெரியவன்) ஆனபோது அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான் (எபி 11:24,25)

5) உலக கவலை (லூக் 21:34)- தேவ பிள்ளைகள் உலக கவலைக்கு இடம் கொடுக்க கூடாது. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5:7)

6) அதிக வேலை – அதிக வேலையில் ஈடுபட்டதால் மார்த்தாளுக்கு தேவனுடைய பாதத்தில் அமர முடிய வில்லை (லூக் 10:41,42). தேவ பிள்ளைகள் உலக வேலையை குறைத்து வேதம் வாசிக்க முயற்சி செய்ய வேண்டும்.

7) நவின சாதனங்கள் – TV, INTERNET, MOBILE, FACE BOOK, TELEGRAM, INSTAGRAM, WHATSAPP, EMAIL, GMAIL, SKYPE, HI5, WECHAT. இன்றைக்கு அநேகர் இதற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இதை உபயோகிப்பது தவறு இல்லை. ஆனால் இவை நமது control ல் இருக்க வேண்டும். இதை உபயோகிக்கும் நேரம் குறைவாக இருக்க வேண்டும். இவைகள் வேத வாசிப்புக்கு தடையாக இருக்க கூடாது. இன்றைக்கு அநேகர் கையில் வேத புத்தகத்திற்கு பதிலாக (சங் 149:8) cell phone இருப்பதை காணலாம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends