இந்த உலகில் தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள்

Share this page with friends


ஒரு தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள் வேதத்தில் அநேகம் உண்டு. அதில் ஒன்று அரசியல் (அரசியல் கட்சிகளுக்கு)

ஞானமென்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு (1 தீமோத்தேயு 6 :20)

மேலே உள்ள வசனம் தெளிவாக அதை கூறுகிறது (அரசியல் கட்சிகளின் கொள்கைகள் நல்லவைகள் போல தோன்றும்). ஆகையால் தேவபிள்ளைகள் எந்த அரசியல் கட்சியிலும் சாராமல், ஈடுபடாமல் இருப்பது நல்லது.

இன்றைய நாட்களில் ஊழியர்கள் (ஜயர், பிஷப், பாஸ்டர்கள்) நேரடியாக அரசியலில் ஈடுபடுவதை காணலாம். Facebook, whatsapp ல் அநேகர் அரசியல் பதிவுகளை பதிவிடுவதை இன்றைய நாட்களில் காணலாம்.

ஒட்டு போட வேண்டும். நல்ல தலைவர்களை தேவன் எழுப்பி தர ஜெபிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
(1 கொரிந்தியர் 10:23)

அரசியலில் ஈடுபடுவது நமக்கு பக்தி விருத்தியை உண்டாக்காது.

ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் கர்த்தர் (தானியேல் 2-21)

யார் வந்தாலும் நேர்மையான ஆட்சியை மக்களுக்கு தர முடியாது. காரணம் உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் (பிசாசு) கிடக்கிறது (1 யோ 5:19) இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே இந்த பூமியில் ஊழல் இல்லாத உண்மையான ஆட்சியை 1000 வருட அரசாட்சியில் மக்களுக்கு தர முடியும் ( வெளி 5-10, 11-15 சகரியா 9-10)

ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
2 கொரிந்தியர் 11-29


Share this page with friends