குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்

Share this page with friends

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய இவை தான் காரணம்

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

  1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
  2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
  3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
  4. விரும்பியதைப் பெற இயலாமை.
  5. ஒருவரையொருவர் நம்பாமை.
  6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
  7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
  8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
  9. விருந்தினர் குறைவு.
  10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
  11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
  12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
  13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
  14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

  1. அன்பாகப் பேசுவது
  2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
  3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
  4. குறை கூறாமல் இருப்பது.
  5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
  6. இன்முகத்துடன் இருப்பது.7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
  7. பிறரை நம்புவது.
  8. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
  9. பணிவு
  10. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
  11. பிறர் வேலைகளில் உதவுவது.
  12. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
  13. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
  14. சுறுசுறுப்பு
  15. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
  16. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
  17. நகைச்சுவையாகப் பேசுவது.
  18. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
  19. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
  20. நேரம் தவறாமை.
  21. தற்பெருமை பேசாமல் இருப்பது.
  22. தெளிவாகப் பேசுவது.
  23. நேர்மையாய் இருப்பது.
  24. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள…
பத்து கட்டளைகள்

  1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
  2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
  3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
  4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
  5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
  6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
  7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
    8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
  8. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
    10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்

Share this page with friends