வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது

Share this page with friends

வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது:

மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
(சங்கீதம் 12:8)

வேட்பாளரை மட்டும் நோக்குங்கள். உண்மையானவரா? நீதியானவரா?
ஏழை எளியவர்களை காப்பாற்றுவாரா?

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிப்பாரா?

புத்தியும் படிப்புமுள்ள மனிதர்களை ஆலோசனைக்காரர்களாக வைத்திருக்கிறாரா?

ஏராளமான மக்களை ஆளும் திறமையுள்ளவரா?

அறிவுள்ள தலைவர்களை தன்னுடன் வைத்திருப்பவரா?

நியாயத்தில் வாய் தவறாதவரா?

யார்மீதும் கசப்பான எண்ணம் இல்லாதவரா?

தன் வீட்டை விசாரிப்பவரா?

கடவுளுக்கு பயந்தவரா? அவர் வழி நடப்பவரா?

இவர்கள் ஆட்சியில் நாம் வாங்குகிற சம்பளம் நம் பிடித்தம்போக சங்கடமில்லா வாழ்வுண்டா என சிந்தியுங்கள்.

நாம் எதற்க்கு முதலமைச்சருக்கு, பிரதமருக்கு, மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஜெபிக்க வேண்டும்?

நாம் எல்லாப் பக்தியோடும் இருப்பதற்க்காகவும்

நல்லொழுக்கத்தோடு இருப்பதற்க்காகவும்

கலகமில்லாமல் சமாதானமான ஜீவனம் பண்ணும்படிக்கும்

ஜெபம் செய்யவேண்டும்.
(1 தீமோத்தேயு 2: 2)

நாம் இவர்களுக்காக ஜெபிக்காமல் விட்டோமே ஜெபித்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதே என்று வருந்துவது பலனளிக்காதே?
ஆக காலத்திலே அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
தேவன் இதையேதான் விரும்புகிறார். அந்தந்த தேசத்திற்க்காக அந்தந்த மாநிலத்திற்க்காக அவரவர்களே ஜெபிக்கவும் விரும்புகிறார். மற்றவர்களையும் கர்த்தரே ஜெபிக்க எழுப்புகிறார். ஆகவே தேசத்திற்க்கான மாநிலத்திற்க்கான ஜெபம் மிக மிக தேவையான ஒன்று.

இன்று யாருக்காக ஜெபிக்கப்போகிறீர்கள்?


Share this page with friends