தாமஸ் ஆல்வா மற்றும் சக விஞ்ஞானிக கண்ட மெய்பொருள்

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் ஒரு சமயம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் வேதாகமத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார்
அப்பொழுது அவர் இருந்த அதே இரயில் பெட்டியில் மற்றொரு விஞ்ஞானியும் ஏறி தாங்கள் என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க
நான் பரிசுத்த வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று எடிசன் பதிலளித்தார்
இதில் அப்படி என்ன இருக்கின்றது என்று இவ்வளவு நேரம் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என மறுபடியும் கேட்க
இதில் கடவுள் எப்படி உலகத்தைப் படைத்தார் மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான் எனப் பலகாரியங்கள் இதில் அடங்கியுள்ளது என பதிலளித்தார் எடிசன்
இதென்ன முட்டாள்தனமான கருத்தாக இருக்கிறது? உலகம் உண்டாக்கப்பட்டதா? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லையே இதெல்லாம் வீண் கட்டுக்கதை உலகம் என்பது ஏற்க்கனவே இருக்கின்ற ஒன்று அதை ஒருவராலும் உண்டாக்க முடியாது எனக்கூறி விட்டு
நீங்கள் இதைப் படிக்கின்ற நேரத்தில் வேறு எதாவது ஆராய்ச்சி செய்திருந்தால் நீங்கள் எதாவது சாதித்திருப்பீர்கள் என்று கேலியாகக் கூறினார்
எடிசன் அந்த விஞ்ஞானியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் அறையை திறந்து அந்த மனிதருக்குக் காண்பித்தார்
அறை முழுவதும் விதவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன
இந்த விளக்குகளை உருவாக்கியவர் யார் என்று அந்த விஞ்ஞானி கேட்க
எடிசன் அவரிடம் மெதுவாக இவையெல்லாம் ஏற்கெனவே இருந்தது அதை யாரும் வடிவமைக்க வில்லை என்றார்
அது எப்படி சார் யாரும் உருவாக்காமல் இது எப்படி உருவாகியிருக்கும் என்றார் அந்த நபர்
இதைப்போல தான் உலகமும் ஏற்கனவே இருக்கவில்லை அதை சிருஷ்டித்த கர்த்தர் ஒருவர் இருக்கிறார் என்றாராம் எடிசன்
கடவுளே அனைத்தையும் உருவாக்கி உருவம் கொடுத்தவர் அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
எரேமியா 10:16 சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.