ஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றவர்கள் சிந்திக்க வேண்டியதும், சிந்திக்க வேண்டாததும்

Share this page with friends

எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்
எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள்.

அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்
நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள்.

எவ்வளவு காலம் காத்திருப்பது எனக் கேளுங்கள்
எவ்வளவு சீக்கிரம் புறப்படுவேன் எனக் கேளுங்கள்.

இது முடியுமா என சிந்திக்காமல்
தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள்

நான் பலவீனன் எனக் கூறவேண்டாம்
அவர் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள்.

நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாது
கிறிஸ்து எல்லாவற்றையும் செய்வார் எனக் கூறுங்கள்.

சோதனையைக் கண்டு அஞ்சுகிறேன் என்று தயங்காமல்
அவர் அதினின்று இரட்சிக்க வல்லவர் என்று கூறுங்கள்

எதை இழந்துவிட்டேன் என்று பேசாது
எதை ஆதாயம் செய்திருக்கிறேன் எனக் கூறுங்கள்.

கடுமையான வாழ்க்கையைக் கண்டு அஞ்சுகிறேன் என்று கூறாது
துன்பம் அனுபவித்தால் ஆளுகை செய்வேன் என்றுக் கூறுங்கள்.

விரைவில் மரித்துவிடுவேன் என்று கூறாது
அப்படியாயின் பரலோகில் இன்னும் அதிக காலம் எனக் கருதுங்கள்.

நண்பர்கள் போற்றுவாரோ என்றுக் கூறாது
தேவன் அங்கீகரிப்பாரா எனக் கேளுங்கள்.

எவ்வளவு சம்பளம் எனக்குக் கிடைக்கும் என்றுக் கூறாது
வேத புத்தகம் எனது காசோலை என்றுக் கூறுங்கள்.

ஐயோ எனக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே என்று கூறாதேயுங்கள்
ஏனெனில் துணைவிக்கும் அழைப்பு உண்டு.

தாலந்து ஏதும் கிடையாது என்று கூறவேண்டாம்
கிறிஸ்து எனக்கு ஞானம் என்றுக் கூறுங்கள்.

அனுபவம் ஏதும் இல்லை என்று கூறவேண்டாம்
ஏனெனில் கிறிஸ்துவிடம் அது தாராளமான உண்டு.

விசுவாசம் எனக்கு இருக்கிறதா என்றுக் கேட்கவேண்டாம்
ஆனால் சந்தேகம் பாவம் என்றுக் கூறுங்கள்.

பேச்சுத்திறன் எனக்கில்லை என்று கூறவேண்டாம்
வாயைப் படைத்தது யார் என்று எண்ணுங்கள்.

வெறும் மதவெறியனாக மாற விரும்பவில்லை என்று கூறாது
என்னை அக்கினி பிழம்பாக மாற்றும் என்று கூறுங்கள்.
  • சி.டி.ஸ்டட்

Share this page with friends