ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பணிந்துகொண்டவர்கள்

Share this page with friends

அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள். மத் : 28 : 17

இயேசுவை யார் யார் அவரை பணிந்து கொண்டார்கள் என்பதை சிந்திக்கலாம். பணிந்து என்ற வார்த்தை தாழ்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவை பணிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக பணிந்து கொண்டார்கள். நாமும் இயேசுவை உண்மையாக சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்துக் கொள்வோம். யார் இயேசுவை பணிந்து கொண்டார்கள் ?

 1. சாஸ்திரிகள் இயேசுவை பணிந்துக்கொண்டார்கள். – மத் : 2 : 11 ,
 2. சீஷர்கள் இயேசுவை பணிந்து கொண்டார்கள். – மத் : 14 : 33 , 28 : 17
 3. ஜெப ஆலயத் தலைவன் யவீரு இயேசுவை பணிந்து கொண்டார்.
  மத் : 9 : 18
  லூக்கா : 8 : 41
 4. குஷ்டரோகி இயேசுவை பணிந்து கொண்டான்.
  மத் : 9 : 18
 5. பிசாசு பிடித்தவன் லேகியோன் இயேசுவை பணிந்து கொண்டான். – மாற்கு : 5 : 6
 6. கானானிய ஸ்திரி இயேசுவை பணிந்து
  கொண்டாள். – மத் : 15 : 25
 7. கண் திறக்கப்பட்ட குருடன் இயேசுவை பணிந்து கொண்டான் யோவா : 9 : 38
 8. மரியாள் மற்றும் ஸ்திரி இயேசுவை பணிந்து கொண்டாள் – மத் : 28 : 9

ஆண்டவர் இயேசுவை பணிந்து கொண்டவர்களின் பெயர்களை கவனித்தோம். இவர்கள்இயேசுவை பணிந்து ஒவ்வொருவரும் ஒரு நன்மையை அற்புதத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நாமும்இயேசுவை பணிந்துக்கொண்டு அவரிடத்தில் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends