78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media

Share this page with friends

ஒரு முறை வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க உங்களுக்கு எத்தனை மாதங்கள் தேவைப்படுகிறது. ஏன் நம்மில் சிலருக்கு பல வருடங்கள் கூட தேவைப்படலாம். ஆனால் எனக்கு 78 மணி நேரங்கள் போதும் என கூறி முழு வேதாகமத்தையும் பலர் முன்னிலையில் வாய்திறந்து வாசித்து முடித்திருக்கிறார் நமது தமிழ் நாட்டை சேர்ந்த போதகர் ஒருவர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த போதகர் ஐசக் டேனியல் வித்தியாசமான புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இரவு பகல் என பாராமல் உலக சாதனை நீதிபதிகளுக்கு முன்பு பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் 78 மணி நேரம் இடைவிடாமல் வாசித்து உலக சாதனை படைத்துள்ளார். பதக்கங்கள் மற்றும் உலக சாதனைக்கான சான்றிதல்களை பெற்ற பின் போதகர் ஐசக் டேனியல் செய்தியாளர்களை சந்தித்தார்.

போதகர் ஐசக் டேனில் ஏற்கனவே நான்கு உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேத வசனத்தை வாசித்து சாதனை புரிந்த இந்த போதகரை உலகமெங்குமுள்ள போதகர்களும் விசுவாசிகளும் பாராட்டி வருகின்றனர்.

இந்த உலக சாதனையை தான் படைக்க காரணமென்ன என்பதையும் போதகர் ஐசக் டேனியல் கூறியுள்ளார்.


Share this page with friends