தீ ‘ என்னும் தீமோத்தேயு !

Share this page with friends

தீ ‘ என்னும் தீமோத்தேயு ! (ஓர் சிறப்பு பார்வை)

வேதத்தை அறி
அன்றுதான் நீ
அறியப்படுவாய்

அந்தச் சிறுவன்
பரிசுத்த வேத எழுத்துக்களை
சிறு வயது முதல் அறிந்தவன்

ஏறத்தாழ ஈராயிரம்
ஆண்டுகளாக
அறியப்பட்டவன்

தளிர் போல இருந்தபோது
தகப்பனை இழந்தவன்

துளிர்த்துக்கொண்டிருந்தபோது
துயரத்தின் உயரத்திற்குச் சென்றவன்

அம்மாவின் அரவணைப்பிலும்
பாட்டியின் பராமரிப்பிலும்
வளர்க்கப்பட்டவன்

Caregivers என்றழைக்கப்படும்
லோவிசாள் (Lois) பாட்டியும்
ஐனிக்கேயாள் (Eunice) அம்மாவும்
இந்த இளம் ஒலிவ மரக்கன்றுக்கு
நெருப்பு வளையம் போலிருந்தவர்கள்

பொதுவாக நெருப்புக்கு
இருக்காது பொறுப்பு
எதையும் எரித்துவிடும்

ஆனால் இந்த இரண்டு
மனித நெருப்புகள்
சந்தித்த இழப்புக்களினால்
பொறுப்புக்கள் கூடிவிட்டது

பவுலும் பர்னபாவும்
லிக்கோனியாவுக்கு
சென்றபோது,
நிறைவேற்றிய சுவிசேஷ
ஊழியத்தால்
இரட்சிக்கப்பட்ட குடும்பம்

அன்றுமுதல்
லோவிசாளுக்குள்ளும்
ஐனிக்கேயாளுக்குள்ளும்
நேசரைப் பற்றிய நேசத் தீ’
எரிய ஆரம்பித்தது

அதுவே விசுவாசத் தீ’யாக
உருமாறி மகனுக்கும் பரவியது

இது கொரோனாவுமல்ல
காட்டுத் தீயும் அல்ல
இது விசுவாச வீட்டுத் தீ ‘

அவனது பெயரின் துவக்கத்திலேயே
தீ’ எரிவதைப் பார்க்கலாம்
பற்றவைத்தவர் பாட்டி
எண்ணெய் ஊற்றியவர் அம்மா

தீமோத்தேயு என்றால்
தேவ மேன்மை என்று அர்த்தம்

அர்த்தமில்லாமல் பெயர்
வைக்கவில்லை

முன்னோர்கள்
மூட்டிய விசுவாசத் தீ’யானது
இந்த இளம் வாலிபனுக்குள்
ஓங்கி எரிந்தது
அந்தத் தீ’ இன்னமும்
அகிலமெங்கிலும்
எரிந்துகொண்டிருக்கிறது

அது ஓர் சாதியத் தீ’ அல்ல
சத்தியத் தீ ‘
பாசிசத் தீ’ அல்ல
பாசத் தீ’ …நேசத் தீ’
உத்தமத் தீ ‘

தீமோத்தேயுவின்
தகப்பன் கிரேக்கன்
தாய் யூத ஸ்திரீ

கலப்பினப் பெற்றோருக்குப்
பிறந்தவன் – ஆனால்
களங்கமில்லா ஞானப்பாலைப்
பருகினவன்

இவனது பிறப்பில்
இரண்டு ஜாதிகள்
கலந்திருந்தன, ஆனால்
இவனது இரத்தத்தில்
எதுவும் கலக்கவில்லை

யூதனாகவும்
காட்டிக்கொள்ளவில்லை
கிரேக்கனாகவும்
நடந்துகொள்ளவில்லை

பேதுரு போல, “அந்நிய
ஜாதியானோடே கலந்து
அவனிடத்தில்
போக்குவரவாயிருப்பது
யூதனானவனுக்கு
விலக்கப்பட்டிருக்கிறது
என்றெல்லாம் பேசவில்லை ”

கிறிஸ்துவை பிரதிபலித்து
தகப்பனுக்குப் பிள்ளை
ஊழியஞ்செய்வது போல
பவுலுக்குப் பக்கத்திலிருந்து
ஊழியம் செய்தவன்
சிறையிலும் கூடவே இருந்தவன்

பவுல் தெர்பைக்கும்
லீஸ்திராவுக்கும்
சுற்றுப்பயணம்
இல்லை, இல்லை
சுவிஷேசப் பயணம்
மேற்கொண்டபோது
இந்தத் தீ’யைக் கண்டுபிடித்தான்

அப்போது அந்தத் தீ’க்கு
பதினாறு வயதிருக்கும்
அப்போஸ்தலர் 16-ல் இதைப்
பார்க்கலாம்

தீமோத்தேயு என்னப்பட்ட
ஒரு சீஷன் இருந்தான்
என்று ஆரம்பமாகிறது

Season க்கு Season
மாறுகிற சீஷன் அல்ல !

காலத்திற்கேற்ற கோலம்
அவனிடம் இல்லை
ஊருக்கு ஊர் நிறம் மாற
அவன் என்னப் பச்சோந்தியா?

பவுலின் இருதயத்திற்கு
ஏற்றவன். தேவனுடைய
இருதயத்திற்கும் ஏற்றவன்

“என்னைப் போல மனதுள்ளவன்
அவனையன்றி வேறொருவனும்
என்னிடத்திலில்லை ” என்று
சொல்லுமளவுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம் போல
பரிமளித்தவன்

உண்மையுள்ளவன்
உக்கிரணத்துவமுள்ளவன்
உத்தம இருதயத்தோடு
ஊழியம் செய்தவன்

இந்த உத்தம குமாரனுக்கு
ஆவிக்குரிய தகப்பன்
இரண்டு நிரூபங்களை
எழுதினார்

கறுப்புத் தங்கத்தை
அதாவது நிலக்கரியை
அள்ளியெறிந்து
நீராவி எஞ்சினை
ஓட்டுவது போல

ஆசீர்வாதங்களை
அள்ளி எறிந்து
என் உத்தம குமாரனே வாழ்க
என்றெல்லாம் வாழ்த்தவில்லை

“உன் இளமையைக் குறித்து
ஒருவனும் அசட்டைபண்ணாதபடிக்கு,
நீ வார்த்தையிலும், நடக்கையிலும்
அன்பிலும் ஆவியிலும் , விசுவாசத்திலும்
கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு”

நான் வருமளவும் வாசிக்கிறதிலும்
புத்திசொல்லுகிறதிலும்
உபதேசிக்கிறதிலும்
ஜாக்கிரதையாயிரு”

இப்படி இரு, அப்படி இரு
என்றெல்லாம் சொன்னால்,
இன்றைய வாலிபன் சொல்லுவான்
“நான்தான் உத்தம குமாரனாயிற்றே
எனக்கெதற்கு இந்த Advice
கைக்குள்ளே இருக்கிறது Device
அதுபோதும்
சும்மா சொன்னதையே
சொல்லாதீங்க’’ என்பான்

எபேசு சபையின் போதகனும்
உத்தம குமாரனுமாகிய
தீமோத்தேயு ஒரு குணசாலி
கூடார வாசி
அப்படியெல்லாம் பேசுவதற்கு
அவன் என்ன பின்மாறிப்போன
அவிசுவாசியா என்ன?

இந்த இளம் வாலிபனுக்கு
எழுதப்பட்ட இரண்டு
நிரூபங்களும்
இருப்புத் தண்டவாளம் போன்றது

இதைக் கருத்தாய் வாசித்தால்
விசுவாசியே, ஐசுவரியவானே
நீ தடம்புரளமாட்டாய்
Lockdown- லும் உன் விசுவாச வண்டி
சீராய் ஓடும்

பவுல் எழுதிய
கடைசி நிரூபங்கள் இவை
இதற்குப் பின் அவர்
பானபலியாய் வார்க்கப்பட்டார்

தீமோத்தேயுவின் உள்ளம்
எப்படி உடைந்து போயிருக்கும்?

அப்பாவும் இல்லை
ஆவிக்குரிய தகப்பனும் இல்லை
ஆனால் அழைத்தவர் இருக்கிறார்
அழைப்பு இருக்கிறது
ஊழியம் இருக்கிறது
உன்னதர் உடனிருக்கிறார்

தாயும் பாட்டியும்
ஊரும் ஆரோனுமாக
உருமாறியதைக் கொஞ்சம்
உற்றுப்பாருங்கள்

ஒரு விசுவாச வீட்டில்
பெண்கள் இருவர்
இப்படி கைகோர்த்தால்
இணையதளத்தை விட
பெரிய தளத்தை ஏற்படுத்தி
உலகத்தைக் கலக்கிடலாம்
என்பதை இந்தத்
தாய்க்குலம்
பறைசாற்றுகிறது.

(இப்படைப்பு உங்களையும்
இனிவரும் சந்ததியையும்
சிந்திக்க வைக்கட்டும்
தீ ‘ என்னும் தீமோத்தேயுக்கள்
எழும்பட்டும் )

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவத்தண்ணீர் ஊழியங்கள்


Timothy, the Fire! (A Special Overview)

Know the Bible
Only then will you be known

That boy had read and known
the words of the Holy Scriptures
from a very young age

He was known for approximately
two thousand years

He lost his father
at a very tender age
While he was just a budding young boy
he experienced extreme pain

He was brought up under the
nurturing wings of his mother,
and the care of his grandmother

His caregivers, Lois, his grandmother,
and Eunice, his mother,
were like a ring of fire
around this young Olive sapling.

Generally, the property of a fire is that
it consumes anything that comes in its way
But the losses which they met
on the lives of these
two human pillars of fire
increased their responsibilities!

When Paul and Barnabas
were travelling to Lyconia,
their evangelism resulted
in this family getting saved
From that day onwards,
the fire of love for the Saviour
started burning in Lois and Eunice
This in turn, took the form of the
fire of faith and caught on to the son

This is neither Corona nor a wildfire,
But the fire of faith from a faith home

We can see the fire in his name
from the first letter ‘Thee,
which means fire in Tamil.

The fire in him was started
by his grandmother
and the oil to fan that fire
was poured on him by his mother.

Timothy means ‘Honouring God’.
This name was not given to him
without a meaning or purpose to it
The fire of faith, which his forefathers had kindled,
burned fiercely within this young man and
that fire continues to burn all over the world.

This fire is not a community fire
but a fire of Truth,
Not a fire of fascism but a fire of compassion,
a fire of love, a fine fire of righteousness!

Timothy’s father was a Greek and
mother a Jew
Born to parents of mixed cultures
but having drunk the pure milk of wisdom

He was born of the bloodline
of two different races,
but his blood did not have
any of those traits

He neither acted like a Jew
nor behaved like a Greek.
Like Peter, he did not say,
“It is not lawful for a Jew to come into the Gentiles
and to go in with them.”
Reflecting Christ,
as the Son ministered for His Father,
he ministered alongside with Paul and
also was in prison with him.
It was not during his
pleasant journey to Derby and Lystra
but it was on a trip to preach the Gospel,
that Paul found this fire (Timothy).

This ‘Fire’ was sixteen years old
which can be seen in Acts 16
It begins with the words
‘A certain disciple was there,
named Timotheus’

He was not a disciple
who changed from season to season,
Not a person to change patterns at different times
nor was he someone to change his colours
like a chameleon, from city to city

He was a man after Paul’s heart
A man after God’s heart!
“There is no one who has a heart like him”
was said of him, with a level of confidence,
of having the purity of gold
He was truthful person,
A fierce man,
A man who ministered with a heart of integrity

His Spiritual Father
wrote two Epistles
to this man of integrity

It is like using black gold,
meaning – shovelling coal
into a steam engine.

Likewise, neither
were the blessings thrown
Nor was it said of him
“Long live this man of integrity”!

“Do not let anyone point fingers
at your youthfulness
Personify the Word of God in speech,
in your walk, in showing compassion,
in spirit, in faith and in purity, to the believers.”

Be careful in following my leading,
my sayings, my advice to you
and in what I teach you”.

If anyone says “Be like this, be like that”
to the youth of today,
he will say “ I am already a perfect son
Why do I need this advice?
I have all in this device which I have in my hands.

That is enough. Don’t keep saying the
same things over and over again”

Do you think Timothy,
a preacher at Ephesus
and a righteous young man,
resident of a decent home,
could, in any way,
be called a backsliding, unbeliever?
The two epistles written to this young man
are like his track records
If you read these Epistles carefully,
You Believer, You affluent person
You will not falter,

Even during this lockdown
Your carriage of faith will run steadily

These were the last epistles
written by the Apostle Paul,
after which he attained martyrdom
In what way would have Timothy’s
heart been broken?
He did not have his father.
Nor his spiritual father
But the One who called him was there
The calling is there,
Ministry is there,
The Most High was there with him

Just observe the transformation of
Mother, grandmother,
as Hur and Aaron

If all the Womens in a house of faith,
join hands and unite,
they can create a bigger platform than the internet,
and can shake the world itself
this is what the community of
women proclaims

(Let this dedicated prose make you,
your family and descendants think
and let many Fiery Timothy’s arise!)

Written in Tamil by
Pastor J. Israel Vidya Prakash,
Living Waters Ministries, Madurai -14.

Translated by Sis. Sulbi Rao, Chennai


Share this page with friends