கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.
போதகர்களின் அன்பான கவனத்திற்கு…
இன்றைய காலகட்டத்தில் அநேக நல்ல நல்ல ஊழியர்களை கொரோனா தொற்று காரணமாக இழந்து விட்டோம். மனைவி பிள்ளைகள் விசுவாசிகள் என்ன செய்ய என்ன திகைத்து நிற்கும் காட்சிகள் இதயத்தை வேதனைப்படுத்துகிறது. பாடுபட்டு வளர்த்த ஊழியங்கள் எல்லாம் பட்டமரமாக பரிதாபமாக இருக்கும் நிலையை கண்டு தாங்கொன்னா துயரமும் மனப்பாரமும் கொண்டேன்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.
1. கொரனா தொற்று ஒரு வேளை வந்துவிட்டது என்றால் வெட்கப்படாமல் அதை தயவு செய்து நண்பர்களுக்கும் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்துங்கள் காரணம் எல்லா இடங்களிலும் ஜெபம் ஏறெடுக்கப்படும். அந்த ஜெபம் நிச்சயமாக விடுதலை தரும்.
2.இரண்டாவதாக பொருளாதார உதவிகள் பலரிடம் இருந்து வர வாய்ப்பு உள்ளது.
3.சமூக இடைவெளி கடைபிடியுங்கள்.
4.கொஞ்சம் நாள் ஜெபங்கள் மற்றும் ஆராதனைகளை மற்றும் ஊழியங்களை செய்யாமல் குடும்பத்தாரிடமோ அல்லது உதவி ஊழியரிடமோ நடத்த சொல்லுங்கள்.
5.சூடான தண்ணீர் மற்றும் சுக்கு மிளகு திப்பிலி மற்றும் இஞ்சி பூண்டு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
6.குளிர்பாணங்கள் வேண்டாம்.
7.எண்ணெய் ஆகாரங்களை பெரும்பாலும் தவிருங்கள்.
8.வெந்நீரில் குளியுங்கள்.
9.பிரசங்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை கொஞ்சம் நாள் ஒதுக்கி வையுங்கள்.
10.எல்லாவற்றை விட கர்த்தரின் மாறாத வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்து ஜெபித்துக்கொண்டே இருங்கள்.
தயவு செய்து இந்த பதிவை அனைவரும் ஷேர் செய்யவும். நன்றி.
S.David Livingstone