டிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:

டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட டொனால்டு ட்ரம்ப், இந்த ஆண்டு அமெரிக்காவைப் பெரிதும் பாதித்த கொரொனோ அச்சுறுத்தல் குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்த ஆண்டு கொண்டாட்டமானது வழக்கத்தைவிட வேறுபட்டிருக்கும் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ஒவ்வோர் ஆண்டும் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் போன்றே இந்த ஆண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவோம். இந்த நன்னாளில் கடவுளுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, நமது நண்பர்களைச் சந்தித்து அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவோம். அத்தோடு மட்டுமல்லாமல் முன்களப் பணியாற்றிவரும் மருத்துவத் துறையினருக்கும், ராணுவத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
நன்றி: விகடன்