தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலி

Share this page with friends

தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலியான சம்பவம் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர்,13 ஜூன் 2021

சென்னையில் துக்க வந்து விட்டு பெங்களூர் திரும்பிய போது ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து 2 போதகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் கொட்டலஹல்லி பகுதியில் தி சியோன் பெந்தகோஸ்தே மிஷன் சபை அமைந்துள்ளது. இங்கு தலைமை போதகராக இருந்தவர் விக்டர் மோகன் (வயது 60). அதே சபையில் அவரது உதவி போதகராக இருந்தவர் தாவீது ராஜா (வயது58).

சென்னை அடையாரில் அடையாறு பகுதியில் ஊழியம் செய்த சென்டர் பாஸ்டர். ஜான்சன் போதகர் இறந்ததையடுத்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பாஸ்டர். விக்டர் மோகன், பாஸ்டர். தாவீது ஆகிய 2 போதகர்களும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்தனர்.

அவர்கள் வந்த காரை சாம்சன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மாலையில் அடக்க ஆராதனையில் பங்கு பெற்று விட்டு போதகர்கள் இருவரும் மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் அவர்களது கார் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது டிரைவர் சாம்சன் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறிய கார் சாலை தடுப்பின் மீது மோதி, அருகில் இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊரடங்கு காலம் நள்ளிரவு நேரம் என்பதால் விபத்து நடந்து ஒரு மணி நேரம் வரை யாரும் இதனை கவனிக்கவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து இதனை கண்டவர்கள் இது குறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காருக்குள் போதகர்கள் இருப்பதை கண்டவர்கள் இது குறித்து வேலூர் போதகர் துரைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போதகர் துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் போதகர்கள் விக்டர் மோகன், தாவீது ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போதகர் துரை மூலமாக இறந்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த போதகர்கள் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர்.

காரை ஓட்டி வந்த டிரைவர் சாம்சன் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் போதகர்கள் இரண்டு பேர் உயிரிழந்த இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாஸ்டர். விக்டர் மோகன் வேலூர், பாளயங்கோட்டை, மதுரை, தற்போது பெங்களூர் ஆகிய இடங்களில் சென்டர் பாஸ்டராக இருந்து அற்புதமான ஊழியத்தை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் இரு போதகர்களுக்கும் மரணம் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் ஸ்தாபன எவல்லைகளை கடந்து முழு கிறிஸ்தவ சமூகத்தினையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மரணம் TPM சபைகளுக்கு மிகப்பெரிய இழப்பு.

இவர்கள் இருவரின் நல்லடக்க ஆராதனை 14.06.2021 அன்று காலை 9.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள விசுவாச வீட்டில் நடைபெற்றது.

இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? யோபு 9:12 என்ற வசனத்தின் படி நம்மை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழி இல்லாமல் நிற்கிறோம் .

நல்லடக்க ஆராதனையின் நேரலை காட்சிகள்:


முக்கிய குறிப்பு: தேவ ஊழியர்களின் மரண செய்திகளை நாம் சமீப நாட்களாகவே சற்று அதிகமாக கேள்விப்படுகிறோம். ஆகவே சற்று கூடுதல் கவனம் செலுத்தி தேவ ஊழியர்களின் பாதுகாப்பிற்காக அதிகமாக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஆராதனைக்காக சபையார் கூடுவதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகும் போது என்ன செய்வது?
ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?
கர்த்தர் யாரை எல்லாம் விட்டு விலகினார்
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் க...
சபைப் போதகர்களை , இன்றய சபைகளை விமர்சிக்க கூடாதா? கேள்வி கேட்க கூடாதா?
பாடல் பிறந்த வரலாறு: ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்
ஆடம்பரமில்லாமல் 90 வயது வரை ஓய்வின்றி உழைத்த சுவிசேஷ சிங்கம்
ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி
பெருமையின் பலன்
கர்த்தருடைய அருங்குணங்களின் ஆசீர்வாதங்கள்

Share this page with friends