- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
அங்கீகரிக்கப்படாத காயீன்
- 0
- 163
காயீனும், ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தனர் (ஆதி 4:1). ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார், காயீனின் காணிக்கையோ அங்கீகரிக்கப்படவில்லை. காரணம், ஆபேலின் காணிகை அங்கீகரிக்கப்படும் முன் தேவன், ஆபேலை அங்கீகரித்தார் அதனிமித்தம் அவன் காணிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், தேவனோ காயீனை அங்கீகரிக்கவில்லை, காரணம் காயீனின் காணிக்கைக்கு அப்பால் தேவன் காயீனை நன்றாக அறிந்திருந்தார். அவன் காணிக்கையை அங்கீகரியாததால் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தேவன் வெளிப்படுத்தினார் (நீதி 21:27).
1. விசுவாசமில்லாதவன் ஆதி 4:3,4 (எபி 11:4)
2. கோபக்காரன் ஆதி 4:5
3. உணர்வற்றவன் ஆதி 4:6,7
4. சதிகாரன் ஆதி 4:8
5. கொலைகாரன் ஆதி 4:8
6. பொய்யன் ஆதி 4:9
7. தர்க்கிக்கிறவன் ஆதி 4:9
நாம் தேவனுக்கு பிரியமாயிருக்கும்போது மட்டுமே நம்முடைய செயல்களும் தேவனுக்கு பிரியமாயிருக்கும். நாம் தேவனுடைய பார்வையிலே அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, நம்முடைய செயல்களும் தேவனால் அங்கீகரிக்கப்படும். “காயீனைப் போலிருக்க வேண்டாம்” (1 யோவா 3:12)
Thanks To Vivekanath