காரியத்திற்கு உதவாத தரிசனங்கள்
* கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நடந்து கொள்ள விருப்பம் இல்லாத ஆபிரகாமின் தரிசனம் நிச்சயம் செயலற்று போய் இருக்கும்.
*பாதரச்சையை கழற்றி போட விருப்பம் இல்லாத பட்ச்சத்தில் மோசேயின் தரிசனம் நிச்சயம் எகிப்தில் இருந்து விடுதலையை கொண்டு வந்து இருக்காது.
*ஜெபத்தில் போராடாத பட்ச்சத்தில் யாக்கோபின் தரிசனம் நிச்சயம் தேவ ஆசீர்வாதத்தை கொண்டு வந்து இருக்காது.
*செப்பனிடாத பலிபீடத்தில் பலி வைக்கப்பட்டு இருந்துயிருந்தால் ஆக்கினியின் தரிசனம் நிச்சயம் பலிபீடத்தில் இறங்கி இருக்காது.
*உதடை அக்கினியால் தொட விட்டு கொடுக்காத ஏசாயாவின் தரிசனம் நிச்சயம் வாக்குதத்தங்களை பேசி இருக்காது.
*பேலன் குன்றி செத்தவனை போல கீழே விழ தானியேல்/யோவான் போன்றவர்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்து இருந்தால் வரப்பொகிற தரிசன வெளிப்பாடுகளை பெற்று இருக்க முடியாது.
*சடுதியாக மாம்ச கண் குருடாக கண்ணின் செதில் கீழே விழ விட்டு கொடுக்காத பட்ச்சத்தில், கடினமான அந்த சத்தத்தை கேட்க விட்டு கொடுக்காத பட்சத்தில், அந்த மகிமையின் ஒளியை பவுல் சந்தித்து இருந்து இருக்க மாட்டார். சபைகளையும் ஸ்தாபித்து இருக்க மாட்டார்.
எனவே தரிசனம், எழுப்புதல் என்று அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது, அந்த தரிசனத்தின் தனி மனித தாக்கம் என்ன? தனி மனித மாற்றம், மறுரூபம் என்ன? விளைவு என்ன? என்பதை குறித்து தெளிவான அறிவு இல்லையெனில், எல்லா தரிசனமும் சத்தம் இடுகிற வெண்கல ஓசைகளே!
செலின்