அடங்கா குதிரைகள்!… வித்யா’வின் விண் பார்வை!

Share this page with friends

(மலேசியாவில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய, நல்லாசான் என்ற சர்வதேச விருதைப் பெற்ற பின் எழுதப்பட்ட கட்டுரை).

பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு,
தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய்,
ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து,
ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும்,
அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று (மாற்கு 7:24)

இயேசு எழுந்து
அவ்விடம் விட்டுப் புறப்பட்டு..
.

எங்கேயிருந்து
எங்கே?

எருசலேமிலிருந்து வந்த
பரிசேயரும் வேதபாரகரும் இருக்கும் இடம்விட்டு
தேவையுள்ள இடத்திற்க்கு புறப்பட்டார்

அந்த அடங்கா குதிரைகள்
குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டத்தார்

முன்னோர்களின் பாரம்பரியத்தைப்
பதியம் போட்டு வளர்க்கும்
பாரம்பரிய விவசாயிகள்

அடிக்கடி கைகளைக் கழுவுவார்கள்
ஸ்நானம் பண்ணாமல்
சாப்பிடமாட்டார்கள்
கொரோனா தொற்றுநோய்
கிருமிகள் இல்லாத காலம்

அர்த்தம் இல்லாமல்
அழுகையின் சுவற்றில் முட்டி முட்டி
அழுவார்கள்

இயேசுவைக் கேள்விக் கணைகளால்
துளைத்தெடுப்பார்கள்

மனுஷருடைய கற்பனைகளை
உபதேசங்களாகப் போதித்து
தேவனுடைய உபதேசங்களை
குழிதோண்டி புதைப்பார்கள்

தேவனுடைய கட்டளைகளை
காற்றில் பறக்க விட்டுவிட்டு
மனுஷருடைய பாரம்பரியத்தை
கோணிப் பையில் வைத்து
பேணிக் காப்பார்கள்

மார்க்கத்தினால் மாய்ந்தழிந்து
சடங்காச்சாரங்களினால்
சாரமிழந்து
சத்தியத்திற்கு எதிர்த்து நிற்பவர்கள்

கிண்ணங்களையும்
வெண்கலச் செம்புகளையும்
கழுவுவார்கள்

சடங்குகள் என்னும்
கிடங்குகளில்

ஊறிப்போனவர்கள்

பாரம்பரியத்தை
Burry
(அடக்கம்) பண்ணாமல்
தேவனுடைய கட்டளைகளை
Burry
பண்ணுகிறவர்கள்

இன்னும் நூறு ஆண்டுகளானாலும்
இவர்களைச் சரி பண்ண முடியாது

செம்புகளுக்கும்
வம்புகளுக்கும் 

தங்களை விற்றுப்போட்டவர்கள் 

ஆத்துமாவுக்கு அவ்வளவாய்
முக்கியத்துவம் தருவதில்லை
ஆத்துமாவை அந்நிய காரியமாய்
எண்ணுவார்கள்

கொர்பான் காணிக்கை
முறைகளை

நடைமுறைக்குக் கொண்டுவந்து

பெற்றோர் உயிரோடே இருக்கும்போதே
அடக்கம்பண்ணிவிடும்
அடங்கா குதிரைகள்

தங்கள் போதனைகளால்
தேவ வசனத்தை
அவமாக்குகிறவர்கள்

இப்படிப்பட்டவர்களின்
சந்திப்பிற்குப் பின்


ஒரு குட்டிப் பிரசங்கம் செய்து ?
இருதயத்தில் இருப்பதை
ஸ்கேன் பண்ணிக் காட்டிவிட்டு
அவர் எழுந்து
அவ்விடம் விட்டுப் புறப்பட்டார்

(மாற்கு 7 ம் அதிகாரத்தில்
சுழன்று அடித்த சுவிசேஷக் காற்றை
சுவாசித்தபோது
எழுதியது)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் சபை


Share this page with friends